ஆறாண்டுகளுக்கு ஒரு முறை அதிகரிக்கும் பூமியின் நேரம்
பூமியின், துருவங்களில் ஏற்படும் மாறுபாட்டால், ஒரு நாளுக்கான நேரம், ஆறு ஆண்டுகளுக்கு ஒரு முறை, அதிகரித்து வருவதாக, பிரிட்டன் ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர்.
பிரிட்டனின், லிவர்பூல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள், பூமியின் துருவங்களில் ஏற்படும் நிகழ்வுகள் மற்றும் அதனால் ஏற்படும் மாற்றங்கள் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு உள்ளனர். 1962 முதல், 2010 வரை ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில், பல புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி, ஆறு ஆண்டுகளுக்கு ஒரு முறை, பூமியின் ஒரு நாளுக்கான நேரம் அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: பூமி, அதன் சுற்றுப் பாதையில் சுற்றி வரும் போது, தன்னைத் தானே சுற்றுவது வழக்கம். இவ்வாறு, தன்னைத் தானே ஒரு முறை சுற்றிக் கொள்ள, தற்போது, 24 மணி நேரம் ஆகிறது. இது, 3,000 லட்சம் ஆண்டுகளுக்கு முன், 21 மணி நேரமாக இருந்தது. ஓராண்டுக்கு, தற்போது, 365 நாட்கள் இருக்கும் நிலையில், பல லட்சம் ஆண்டுகளுக்கு முன், 450 நாட்களாக இருந்தது. இந்த மாற்றம், புவியின் துருவங்களிலும், மத்திய பகுதிகளிலும் ஏற்படும் மாற்றத்தால் ஏற்படுகிறது. இதன்படி, ஆறு ஆண்டுகளுக்கு ஒரு முறை, பூமியின் ஒரு நாளுக்கான நேரம், மெல்ல அதிகரித்து வந்துள்ளது. இந்த மாற்றம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இவ்வாறு, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
.jpg)
indanilaithan jajjal varuhai kalam poomi thanathu sulatchi wehaththai kuraikkum pothu aatpadum nihalwu appadiye thanathu sulalchi wehaththai kuraithu oor idaththi nindru marupakkam sulala armbikkum indanal allah kurippittathu pola soriyan thanatu thisaiyai matri uthayamahum
ReplyDelete