Header Ads



இங்கிலாந்து இளவரசரின் வருகையை உலகிற்கு அறிவித்த முஸ்லிம் சகோதரர்

இங்கிலாந்து இளவரசர் வில்லியம் - கேட் மிடில்டன் தம்பதியருக்கு கடந்த வாரம் ஆண் குழந்தை பிறந்த செய்தியை முதன்முதலாக அறிவித்ததன் மூலம் 'ஹீரோ' அந்தஸ்துக்கு உயர்ந்தவர் பதர் அசீம்(25).

இந்தியரான இவர் கொல்கத்தாவில் பிறந்து வளர்ந்தவர். கடந்த ஓராண்டாக இங்கிலாந்து அரண்மனையில் உதவியாளராக வேலைகளை செய்து வருகிறார்.

கொல்கத்தாவில் இயங்கிவரும் அயர்லாந்து நாட்டு தொண்டு நிறுவனத்தின் நிதியுதவியுடன் இங்கிலாந்தில் உள்ள நேப்பியர் பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்ற பதர் அசீம் இங்கிலாந்து அரண்மனையில் உதவியாளராக பணியில் சேர்ந்தார்.

இவரது பெற்றோர் இன்னும் கொல்கத்தாவில் உள்ள குடிசைப் பகுதியில் தான் வசித்து வருகின்றனர். அசீமுக்கு வழங்கப்பட்ட இங்கிலாந்து விசா வரும் அக்டோபர் மாதத்துடன் காலாவதியாகின்றது.

இந்நிலையில், அவரது விசா மீண்டும் புதுப்பிக்கப்பட மாட்டாது என இங்கிலாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனால் அவர் இந்தியா திரும்ப நேரிடும் என தெரிகிறது.

 இதுதொடர்பாக கருத்து தெரிவித்த அரண்மனை வட்டாரங்கள் 'ஒவ்வொரு விசா விண்ணப்பமும் தகுதி அடிப்படையில் நியாயமான முறையில் பரிசீலிக்கப்படும்' என கூறியுள்ளன. 

1 comment:

  1. een oruvarai mathatthal adayalabpaduththureerkal

    ReplyDelete

Powered by Blogger.