ஓட்டமாவடி சகோதரருக்கு சவூதி அரேபியா முதலாளியின் உதவி (படம்)
(நஷ்ஹத் அனா)
சவுதி அரேபியா - ரியாத் நகரில் சாரதியாக பணிபுரிந்த மட்டக்களப்பு மாவட்டத்தின் ஓட்டமாவடியைச் சேர்ந்த எம்.பதுர்தீன் என்பவருக்கு ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் காவத்தமுனைக் கிராமத்தில் அவரது எஜமானால் ஏழு லட்சம் ரூபா பெறுமதியான வீடு கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது.
சவுதி அரேபியா - ரியாத் நகரிரைச் சேர்ந்த முதிப் அஸ்ஸபீஈ என்பவரின் வீட்டில் மூன்று வருட காலமாக சாரதியாக பணிபுரிந்த ஓட்டமாவடியைச் சேர்ந்த எம்.பதுர்தீன் என்பவர் தனது தங்கைக்கு இருப்பதற்கு வீடு இல்லை என்று கூறிய போது வீடு ஒன்றைக் கட்டிக் கொடுத்துள்ளார்.
இரண்டு அறைகள், சமயலறை, குளியலறை, மண்டபம், கிணறு உள்ளிட்ட அனைத்து வசதிகளுடனும் ஏழு லட்சம் ரூபாய் பெறுமதியில் இவ் வீடு அமையப் பெற்றுள்ளது.
இவ் வீடு கிடைக்கப்பெற்றது தொடர்பில் சாரதியான எம்.பதுர்தீன் கருத்துத்தெரிவிக்கையில் நான் சாரதியாக சவுதி அரேபியா - ரியாத் நகரில் பணிபுரிந்த மூன்று ஆண்டுகளும் என்னை ஒரு சாரதியாக கவனிக்காமல் அவரது சகோதரனாக பார்த்தது மட்டுமல்லாமல் என்னுடைய தங்கையினது நிலைகுறித்து கூறியபோது அவருக்காக இவ்வீட்டினை கட்டித்தந்துள்ளமை எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
இதற்காக வேண்டி நானும் எனது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் எனது எஜமான் முதிப் அஸ்ஸபீஈக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம் என்றும் குறிப்பிட்டார்.
Post a Comment