தாய், சேய் மரணம் - பொத்துவில் முஸ்லிம்கள் கண்டனப் பேரணி (படங்கள்)
பொத்துவில் பிரதேசத்தில் கடந்தவாரம் ஏற்பட்ட தாய் சேய் மரணமானது வைத்தியசாலை ஊழியர்களின் அசமந்தப் போக்கினாலேயே ஏற்பட்டதென்று ஊர்மக்கள் கருதிவரும் நிலையில், இன்று வெள்ளிக்கிழமை (2013-07-19) ஜூம்மா தொழுகையின் பிற்பாடு பொத்துவில் இளைஞர்கள் அமைப்பினால் பாரிய கண்டனப் பேரணியொன்று இடம்பெற்றது .
இவ்வார்ப்பாட்டத்தில் பொத்துவில் பிரதேசத்தின் இளைஞர்கள் கலந்துகொண்டு தமது எதிர்ப்பினைத் தெரிவித்தனர். மேலும் இவ்வார்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட நபரொருவர் கருத்து தெரிவிக்கையில்,
பொத்துவில் ஆதார வைத்தியசாலையானது பல தசாப்தங்களாக இயங்கிவரும் நிலையிலும் இதுவரையில் பற்றாக்குறை தொடர்ந்து நீடித்தே வருகின்றது என்றும், பிரசவத்திற்காக செல்லும் கர்ப்பினித் தாய்மார்களிடம் பிள்ளைப்பேற்றின் போது அப்பிரிவில் உள்ள தாதியர்கள் மிக அநாகரீகமான வார்த்தைப் பிரயோகங்களை பிரயோகிப்பதாகவும் இன்னும் இப்பிரதேசத்தில் வாழும் மக்கள் தொகைக்கேற்ப சிறப்பாக செயற்படக்கூடிய வைத்தியர் மற்றும் தாதியர் பற்றாக்குறை காணப்படுவதாகவும், இப்பிரச்சினைகளை இத்துறைசார்ந்த அரசியல்வாதிகள் அக்கறையுடன் செயற்பட்டு இனிவரும் காலங்களிலாவது இவ்வாறான பிரச்சினைகள் ஏற்படாதவாரு உரிய தீர்வைப் பெற்றுத்தருமாரு மிகக் கவலையுடன் தெரிவித்தார் .
.jpg)

need retrain the midwifes and nurses.they dont have any idea to help pragnent
ReplyDelete