அல்-ஹிதாயா மகா வித்தியாலய மாணவர்களின் பிரச்சினைக்கு தீர்வு
(எம்.ரீ.எம்.பாரிஸ்)
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் ஓட்டமாவடி கோட்டத்தின் கீழ்உள்ள மட்-மீராவோடை அல்-ஹிதாயா மகா வித்தியாலயத்தில் இருந்து இவ் வருடம் கல்வி பொதுதராதர சாதாரணதர யுஃடு உயர்தரப்பரீட்சைக்கு கலைப்பிரிவிலிருத்து 39 மாணவர்களும் வர்தகப்பிரிவிலிருத்து 08 மாணவர்களுமாக 47 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர்.
இவ்வருடம் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள கா.பொ.த.சாதாரண யுஃடு உயர்தரப்பரீட்சைக்கு தோற்றவுள்ள குறிப்பிட்ட சில மாணவர்களுக்கும் பாடசாலையின் அதிபருக்கும் ஆங்கிலப்பாடம் கற்பிக்கும் அசிரியர் ஒருவருக்குமிடையில் ஏற்பட்ட முரன்பாடு வளர்ச்சியடைத்தன் விளைவாக அம் மாணவர்கள் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்தமைக்கு அமைவாக அதிபரும் ஆசிரியரும் விசாரணைக்காக அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்ட பிற்பாடு மறு விசாரணை கா.பொ.த.சாதாரண பரீட்சையின் பிற்பாடு என ஓத்திவைக்கப்பட்டது.
இவ்வேளையில் இம் மாணவர்களுக்கு ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள உயர்தர பரீட்சைக்கு தோற்றுவதற்கான அனுமதி அட்டை வழங்கும் நிகழ்வு நேற்று முன் தினம் மட்-மீராவோடை அல்-ஹிதாயா மகா வித்தியத்தில் நடை பெற்றது.
அதிபர் ஐ.எல்.மஃறூப் தலைமையில் நடைபெற இந்நிகழ்வின் அதிதிகளாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலய உதவி கல்வி பணிப்பாளர் எம்.எஸ்.றஹ்மான், ஓட்டமாவடி கோட்டக்கல்விப்பணிப்பாளர் எம்.சுபைர், கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் கே.பீ.எஸ்.ஹமீட், கல்விஅதிகாரிகள்,ஆசிரியர்கள்,பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பிணர்கள்,பழைய மாணவ சங்கஅங்கத்தவர்கள் ,பிரதேச பள்ளிவாயல்களின்; நிருவாக சபை உறுப்பினர்கள் கொண்ட குழுவினர் கலந்து கொண்டு மாணவர்களை வாழ்த்தி இதன் போது அதிபர்,ஆசிரியர் மீதும் குற்றம் சாட்றிய மாணவர்கள் அதிபரிடம் மண்னிப்பு கோரி கைகுலுக்கி மகிழ்ச்சிகரமான அதிபரின் வாழ்த்தினை பெற்று தமது பரீட்சை அனுமதி அட்டையின் மீது முறையாக கையப்பமிட்டு தங்களின் பெற்றோர் சகிதம் சமூகமளித்து பரீட்சைக்கான அனுமதி அட்டையினை பெற்றுக் கொண்டனர்.


Post a Comment