Header Ads



முர்சியின் வீழ்ச்சி இஸ்லாமிய அரசியலின் பலவீனத்தை காட்டுகிறது - இஸ்ரேல்

(Tn) எகிப்து ஜனாதிபதி முர்சியின் வீழ்ச்சி இஸ்லாமிய அரசியலின் பலவீனத்தை காட்டுவதாக இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார்.

‘நாட்டை கட்டியெழுப்புவதற்கான பொருளாதார, அரசியல் மற்றும் கலாசார பெறுமானங்களுக்கேற்ப பொருந்திப் போவதில் இந்த தீவிர இஸ்லாமிய அரசுகள் தோல்வியை சந்தித்து வருகிறது’ என ஜெர்மனி நாட்டு வாராந்த பத்திரிகையொன்றுக்கு அளித்த பேட்டியில் நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச பொருளாதாரம் மற்றும் தகவல் தொழில்நுட்ப புரட்சியை கையாள்வதில் இந்த தீவிர இஸ்லாமியவாதிகள் பொருத்தமானவர்கள் அல்ல. இவர்கள் நவீனத்துவத்தைப் புறக் கணித்து மீண்டும் மத்திய காலச் சிந்தனைக்கு பயணிக்கிறார்கள். எனவே அது தோல்வியில் முடிகிறது என்றும் நெதன்யாகு கூறியுள்ளார். 

எகிப்தில் ஏற்பட்ட இராணுவ புரட்சி குறித்து இஸ்ரேல் மிக அவதானமாகவே செயற்பட்டு வருகிறது. முர்சியை பதவி கவிழ்த்த இந்த இராணுவ புரட்சி குறித்து கருத்து வெளியிடுவதை நெதன்யாகு தவிர்த்து வந்தார். எகிப்தின் புதிய தலைமை இஸ்ரேலுடனான உறவை மீண்டும் புதுப்பித்துக்கொள்ளும் என இஸ்ரேல் அரசு எதிர்பார்த்துள்ளது.

5 comments:

  1. சைத்தான் வேதம் ஓதுகிறது.....சர்வ தேச பயங்கரவாதத்தின் தாய் நாடு உங்களுடையது அமெரிக்காவின் செல்லபிள்ளை நீங்கள் உங்களை வாழவைப்பதே அரபு மன்னராட்சி நாடுகளின் எண்ணெய் வளம் தான் ....அம்மன்னர்களின் ஆட்சி தக்கவைப்புக்கு உங்களதும் அமெரிக்காவினதும் அம்மன்னர்களின் நிதி உதவியும் தான் முர்சியின் பதவி கவிழ்ப்பிக்கு காரணம் என்பதும் பரகசியம்

    ReplyDelete
  2. பென்சமீனே.......................முளு உலகத்திலும் இஸ்லாமிய ஆட்சி வரும் வரை இருந்து பார் உனக்கு எல்லாம் புரியும். அப்போது நீங்கள்தான் வீள்ச்சி அடைவீர்கள்.

    ReplyDelete
  3. Mr Nethanyahu wait for some time you will see the results soon

    ReplyDelete
  4. خبير. خبير. يا يهود. جيش محمد سوف يعود

    ReplyDelete
  5. குர்ஆனில் அல்லாஹ்வால் சபிக்கப்பட்ட நாயே! நாம் விழித்துக்கொள்ள தொடங்கியுள்ளோம் நிச்சயமாக அல்லாஹ்வின் உதவியுடன் உன்னையும் உன் கூட்டத்தையும் அழித்தொழிப்போம்.

    ReplyDelete

Powered by Blogger.