யாழ்பாணத்தில் ஆளும்கட்சியில் போட்டியிடுவோர் விபரம்
நடைபெறவுள்ள வட மாகாண சபைத் தேர்லில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பாக யாழ். மாவட்டத்தில் போட்டியிடுவோரின் பெயர் விபரங்கள் வெளியாகியுள்ளது.
இந்த தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக கூட்டமைப்பில் உள்ள நான்கு கட்சிகளும் இணைந்து வெற்றிலைச் சின்னத்தில் யாழ். மாவட்டத்தில் போட்யிடுகின்றன.
இதில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சிக்கு 10 ஆசனங்களும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு 7 ஆசனங்களும் லங்கா சம சமாஜ கட்சி மற்றும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் அகிய கட்சிகளுக்கு தலா ஒரு ஆசனமும் வழங்கப்பட்டுள்ளன.
இதில் முதன்மை வேட்பாளராக ஈழ மக்கள் ஜனநாய கட்சியை சேர்ந்த சின்னத்துரை தவராஜா போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஈழ மக்கள் ஜனநாயக் கட்சி (ஈ.பி.டி.பி)
சி .தவராஜா, க. கமலேந்திரன், ஐ.ஸ்ரீரங்கேஸ்வரன், எஸ்.பாலகிருஸ்ணன், ஏ.சூசைமுத்து, சுந்தரம் டிலகலால், அ.அகஸ்டின், கோ.றுஷாங்கன், எஸ்.கணேசன், இதில் ஒரு பெண் வேட்பாளரும் இணைத்துக்கொள்ளப்படுகிறார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி
இ.அங்கஜன், மு.றெமிடியஸ், எஸ். பொன்னம்பலம், எஸ்.அகிலதாஸ், அ.சுபியான், சர்வானந்தன்;, எஸ்.கதிரவேல்.
அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ்
எம்.எம். சீராஸ்
லங்கா சமசமஜாக் கட்சி
ந.தமிழழகன்
TM

ஈ.பி.டி.பி.யின் சார்பில் போட்டியிடுபவர்களில் ஒருவராக சுந்தரம் டிலகலால் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அவரின் சரியான பெயர் சுந்தரம் திவகலாலா இவர் வடக்கும் கிழக்கும் பிரிவதற்கு முன் வடக்கு கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளராகப் பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கத.
ReplyDeleteSuiyan Moulavi Muslinkalain Adimai sasanathil Kai eluthu itu vittera?
ReplyDeleteminister risath are you crazy? still you need mahinda?
ReplyDelete