Header Ads



கல்முனை மாநகரசபை + கடற்கரை பள்ளிவாசல் நிர்வாகிகளின் கவனத்திற்கு..!

(ஏ.பி. எம். அஸ்ஹர்)

கல்முனை கடற்கரைப்பள்ளிக்கு அருகாமையில் அமைந்துள்ள கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தையும் கடற்கரைப்பள்ளிவாயல் வீதியையும் இணைக்கும் பொருட்டு புதிதாக பாதை ஒன்று உருவாக்கப்படவேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

தற்போது இவ்வலுவலகத்திற்குச்செல்வதற்காக கடற்கரைப்பள்ளி வீதியில் உள்ள அல்பஹ்ரியா மகா வித்தியாலத்திற்கு அருகிலுள்ள இடது பக்க குறுக்குவீதியும் மாதவன் வீதியும் பயன் படுத்தப்படுகின்றதுஅத்துடன் மாதவன் வீதி முழுமையாக செப்பணிடப்படாமையால்இவ்வீதியால் கற்பிணித்தாய்மார்களை ஏற்றிவரும் முச்சக்கரவண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள்இவ்வீதியில் பயணிக்க முடியாதுள்ளது.

இவ்வீதிகள் கடற்கரை வீதியிலிருந்து வருபவர்களுக்கு மிகவும் துாரமாகும். அத்துடன் இக்காரியாலயத்திற்குச் செல்ல தமது பிள்ளைகளைத்துாக்கிக்கொண்டு நடந்து வருவோர் கடற்கரைப்பள்ளிவாயல் பிரதேசத்தினுாடாக மிகுந்த கஷ்டங்களுக்கு மத்தியில் நடந்துசெல்லவேண்டியுள்ளது. இக்காரியாலயத்தை அண்டியு்ள்ள வீதி குன்றும் குழியுமாகவுள்ளது. 

இவற்றை தவிர்க்கும் பொருட்டு கடற்கரைப்பள்ளிக்குச்சொந்தமாகவுள்ள காணியில் அல்பஹ்ரியா மகா வித்தியாலத்திற்கு அருகில் வலது பக்கத்தால் குறுக்குவீதியொன்றை உருவாக்க கல்முனைப்பிரதேச அபிவிருத்திக்குழுவின் தலைவர், கல்முனை மாநகர சபை மற்றும்கடற்கரைப்பள்ளி வாயல் நிர்வாகிகள் ஆகியோர் கூட்டாக இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.