ஜனாதிபதியின் 'இப்தார்' நிகழ்வை பகிஷ்கரியுங்கள் - முஜிபுர் ரஹ்மான்
(Vi) முஸ்லிம்களுக்கு உண்மையான, சமூக உணர்வு இருக்குமானால் கண்டியில் ஜனாதிபதி நடத்தும், ‘இப்தார்’ நிகழ்வை பகிஷ்கரிக்க வேண்டும். அதைவிடுத்து ‘கஞ்சிக் கோப்பைக்கும்’, ‘புரியாணி பொதிக்கும்’ சமூகத்தை காட்டிக்கொடுக்கக் கூடாது என ஐ.தே.கட்சியின் மேல் மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
ராஜகிரியவில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஐ.தே.கட்சியின் ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இதனைத் தெரிவித்தார். இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
இருபது வருட காலமாக இயங்கி வந்த மஹியங்கனை பள்ளிவாசல் மூடப்பட்டு அக் காணிச் சொந்தக்காரரை அச்சுறுத்தி அங்கு தொழுகை நடத்துவதை தடை செய்ய கடிதத்தை பெற்றுக்கொண்டுள்ளது. தம்புள்ள பள்ளிவாசல் மூடப்பட்டு அங்கு வாழ்ந்த 25 முஸ்லிம் குடும்பங்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.
வாத்துவையில் இறைச்சிக் கடை நேற்று முன்தினம் அதிகாலை தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளது. முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகள், தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. தெமட்டகொடையில் இறைச்சி லொறி தீ வைத்து கொளுத்தப்பட்டது.
ஆனால் இதுவரையில் இச் சம்பவங்களின் பின்னணியில் உள்ளவர்கள் கைது செய்யப்படவில்லை. அரசாங்கம் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளை தடுக்க எந்தவிதமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. அசமந்தமான போக்கையே கடைப்பிடிக்கின்றது.
இவ்வளவு காலமும் ஜனாதிபதி கொழும்பு அலரி மாளிகையிலேயே முஸ்லிம்களுக்கான இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வை நடத்தினார். ஆனால் இன்று மத்திய மாகாண சபை தேர்தலை இலக்கு வைத்து, கண்டி ஜனாதிபதி மாளிகையில் இதனை 3, 4ஆம் திகதிகளில் நடத்தவுள்ளனர்.
கஞ்சிக்கோப்பையையும் புரியாணி பொதியையும் கப்பமாக முஸ்லிம்களுக்கு வழங்கி வாக்குகளை கொள்ளையடிக்க முயல்கிறார்.
முஸ்லிம்கள் இன்று பெரும் துன்பத்தை அனுபவித்து வரும் நிலையில் உண்மையான சமூக உணர்வு இருக்குமானால் இந்த இப்தார் நிகழ்வை பகிஷ்கரிக்க வேண்டும்.
அதை விடுத்து இதில் கலந்துகொள்வதென்பது முஸ்லிம்களை காட்டிக் கொடுக்கும் செயலாகுமென்றும் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

மஹியங்கனைப் பள்ளிவாசல் விவகாரத்தை எந்தவொரு அரசியல்வாதியும் இனிக் கையிலெடுக்க வேண்டாம்.
ReplyDeleteஅக்கடையின் உரிமையாளரும், அப்பள்ளிவாசலின் ஜ்தாபகத் தலைவரும் எனக் கூறிக் கொள்ளும் எமதூரைச் சேர்ந்த அல்ஹாஜ் எஸ்.எம். சீனி முகம்மது என்பவர் காத்தான்குடியிலும், கொழும்பிலும் பலரிடம் தனது கடையில் பள்ளிவாசல் என்று ஒன்று இருக்கவில்லை என்றும், தொழுது கொள்வதற்கே தனது கடையின் மேல் மாடியைப் பயன்படுத்தி வந்ததாகவும் கூறியுள்ளார்.
பலவந்தமாக யாரும் கடிதம் எழுதி வாங்கியது பற்றி அவர் இதுவரை எந்தவொரு ஊடகத்திலும் மறுப்புச் செய்தியையும் வெளியிடவில்லை.
இவரது செயற்பாட்டை நம்பி இன்னமும் நமது சமூகத் தலைமைகளும், அரசியல்வாதிகளும் அப்பள்ளிவாசல் விவகாரத்தைக் கையிலெடுத்துப் பேசுவது இறுதியில் அவர்களையே தலைகுனியச் செய்யும்.
-புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-
நல்லா சொன்னீங்க எப்பவரும் பந்தீல முந்தி இடம் பிடிக்கொனும்டு இருக்கோம்
ReplyDeleteபள்ளி உரிமையாளர், அது பள்ளி அல்ல மாறாக அது எனது கடை என்று சொன்ன பின்னும், இந்த அரசியல் வாதிகள் பள்ளி பற்றிப்பேசுவது, அவர்களின் அரசியல் சுயனலத்துக்காவே அன்றி வேறில்லை.
ReplyDeleteமுதலில், முஸ்லிம் சமூகமாகிய நாம் சீராக, நேர்வழியில் நம்மை நாமே சீர்திருத்தி விட்டு, எல்லாம் வல்ல அல்லாவின் உதவியை நாட வேண்டும். அப்போது முஸ்லிம்களுக்கு எல்லாம் சீராக நடக்க இறைவனின் உதவி கிடைக்கும். அல்லாவிட்டால் நிட்சயம் தோல்விதான்....
அல்லாஹ் போதுமானவன்.
ReplyDeleteஇறைவனிடம் பிராத்திப்போம்
---சிராஜ்தீன் சிறோ------
Now, SL CIDs, BBS CIDs, Rawaya CIDs and hele Urumaya CIDs etc...., All are observing and looking into our every matters and places.So, be careful.
ReplyDelete