Header Ads



புத்தளம் வீதி விபத்தில் கடற்படையின் 2 உயர் அதிகாரிகள் பலி

புத்தளம் மாவட்டத்தில் உள்ள கருவெலகஸ்வெவ என்ற இடத்தில் இன்று அதிகாலை நடந்த விபத்தில், கடற்படையின் உயர் அதிகாரிகள் இருவர் பலியாகியுள்ளனர். 

புனாவையில் உள்ள கடற்படைத் தளத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற கடற்படை அதிகாரியின் கார், கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற கொள்கலன் பாரஊர்தியுடன் இன்று அதிகாலை 2.30 மணியளவில் மோதி விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில், காரில் பயணம் செய்த  கடற்படையின் உயர் அதிகாரிகளான கொமாண்டர் ஜனக பிரியந்த, லெப்.கொமாண்டர் சரித் களுதந்திரி ஆகியோர் அந்த இடத்திலேயே மரணமாகினர். 

இந்த விபத்து இடம்பெற்ற கருவெலகஸ்வெவ பிரதேசத்தில், அண்மையில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் சிறிலங்கா இராணுவத்தின் சிறப்புப் படைப்பிரிவுக்கு தளபதியாக நியமிக்கப்பட்ட கேணல் ஒருவரும் கொல்லப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.