'ரணிலின் கீழ் வெற்றியீட்ட முடியாது, என்ற தலைவர் மஹிந்ததான்..! - தயாசிறி
தற்போதைய தலைமைத்துவத்தின் கீழ் ஐக்கிய தேசியக் கட்சியினால் வெற்றியீட்டுவதற்கு முடியாது எனவும் இதனால் கட்சி ஆதரவாளர்களுக்கு எவ்வித நியாயமும் கிட்டாது என்றும் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்த பின்னர் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தயாசிறி ஜயசேகர இந்தக் கருத்தினைக் கூறினார்.
பொதுமக்களுக்கான சேவையை முன்னெடுப்பதற்கு தமக்கு மேலும் கால அவகாசம் இருப்பதாக இதன்போது சுட்டிக்காட்டிய அவர், அர்ப்பணிப்புடன் செயற்படும் நோக்கிலேயே தமது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.
மிகவும் மகிழ்ச்சியுடன் தாம் கட்சியிலிருந்து வெளியேறியுள்ளதாகவும் தற்போது ஐக்கிய தேசியக் கட்சி பட்டமரமாக மாறியுள்ளதாகவும் சுட்டிக்காட்டிய அவர், பட்டமரத்தின் ஓர் அங்கமாக தான் இருக்க விரும்பவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸதான் என்னுடைய தலைவர் என்றும் பல்டி அடித்த தயாசிறி ஜயசேக்கர தெரிவித்துள்ளார்.
Post a Comment