பொதுபல சேனாவை கட்டுப்படுத்தும்வரை நல்லிணக்கம் ஏற்படாது - ரொஹான் குணரத்னா
உள்நாட்டு யுத்தம் முடிவக்கு வந்துள்ள நிலையில், மத அடிப்படையிலான் தீவிரப் போக்குடையவர்களை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கத் தவறுமாயின் சமூக நல்லிணக்கம் சாத்தியமற்றதாகி போய்விடுமென பயங்கரவாதம் தொடர்பான கலாநிதி ரொஹான் குணவர்த்தனா குறிப்பிட்டுள்ளார்.
மதங்களுக்கிடையிலான நல்லிணக்கம் தொடர்பில் கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியுள்ள அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
பொதுபல சேனா ஒரு தீவிரப் போக்குடைய அமைப்பாகும். அது பௌத்த இயக்கம் அல்ல. அரசியல் ரீதியான இயக்கமும் அல்ல. இவ்வாறான அமைப்புக்கள் கட்டுப்படுத்தப்பட வேண்டும். அதுவரை நல்லிணக்கம் ஏற்படாது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நீங்க சொல்றதுண்டா சரிதான் ........ ஆனாலும் அவர்களை கட்டுப்படுத்த முடியலயே .. நம்ம தலைவருக்கு
ReplyDeleteகாரணம் என்னன்று கேக்குறீங்களா ?
சொல்றேன்..........
இவங்கட இஸ்தாபகரே நம்ம தலையப்பா...... புரியுதா ? இப்ப ...