'எனது உயிரையும் அர்பணிக்க தயாராக உள்ளேன்' - முர்சி
(Mohamed Nishad)
சற்றுமுன்னர் எகிப்து ஜனாதிபதி முர்சி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் பின்வருமாறு குறிப்பிட்டார்.
சட்டபூர்வமாக தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதிக்கு மாற்றீடாக எதனையும் நான் அனுமதிக்க மாட்டேன். சட்ட அங்கீகாரத்தை பேணுவதற்காக எனது உயிரையும் அர்பணிக்க தயாராக உள்ளேன்.வன்முறையை இட்டு உங்களை நான் எச்சரிக்கிறேன். ஏனெனில் அது எதிரிகளை மகிழ்விக்கும்.2011 ஜனவரி மாதம் 25 ம் திகதி அநியாயம், சீர்கேடு, மோசடி என்பவற்றுக்கு எதிராக நாம் பெரும் புரட்சி ஒன்றை செய்தோம்.கடந்த ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தல் மிகவும் நேர்மையாக,நீதியாக இடம்பெற்றமைக்கு முழு உலகமுமே சான்றாகும்.எகிப்து அதன் சொந்த நாட்ட சக்தியில் இயங்குகின்றது. எவரினதும் பரிந்துரைகளும் அதனை இயக்காது.சில உள்நாட்டு சக்திகளும்.வெளிநாட்டு சக்திகளும் எகிப்தின் நாட்ட சக்தியை பறிக்க முயல்கின்றன.அதற்கு நான் ஒரு போதும் இடமளிக்க மாட்டேன். சட்டயாப்பு அங்கீகாரமே எகிப்தின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்க கூடியது.நான் சட்டயாப்பு அங்கீகாரதின் அடிப்படையில் ஆட்சிக்கு வந்தவன்.எனவே நாட்டின் நலன் கருதி சட்ட அங்கீகாரத்தை பாதுகாக்க எனது உயிரையும் அர்பணிக்க தயாராகவுள்ளேன்.
பல கட்சிகள் முன்வைத்த முன்மொழிவுகளுக்கு உடன்பட்டுள்ளேன்.கூடிய விரைவில் பாராளுமன்ற தேர்தலையும் நடத்த உத்தேசித்துள்ளேன். இது தவிர சட்டத்தையும் ,இதுவரை ஜனநாயக பாதையில் சாதித்த அடைவுகளையும் பின்னோக்கி நகர்த்த ஒரு போதும் இடமளிக்க மாட்டேன். என எகிப்தின் ஜனாதிபதி தற்போது ஆற்றிய உரையில் திட்ட வட்டமாக கூறினார்.
ஜனாதிபதி முர்சி பதவி விலக கூறி கிறிஸ்தவர்களும் ,மதசார்பற்ற கட்சிகளும் தஹ்ரீர் சதுக்கத்தில். ஆர்பாட்டம் செய்து வருகின்றன. மறுபுறத்தில் ஜனாதிபதிக்கு ஆதரவாக பெரும் திரளான இஸ்லாமிய காட்சிகள் ஆர்பாட்டத்தில் இடுபட்டு வருகின்றன. இந்நிலையில் ஜனாதிபதி முர்சியின் உரை எகிப்தின் அமைதியையும் முன்னேற்றத்தையும் சீர்குலைக்க தருணம் பார்த்து செயப்படும் எதிரிகளுக்கு பலத்த அடியாக அமையும் என்பதில் ஐயமில்லை.

தோல்வி எப்போதும் நிலையானதல்ல இஹ்லாசுடன் எவ்வலவு முயட்சிக்கிரோமோ அதன் பிரதிபலன் இம்மையில் இல்லாவிட்டலும் மறுமையில் இன்சா அல்லாஹ் நிச்சயம் கிடைக்கும். இவ்வுலகிலுள்ள எல்லா செய்தனியநகலையும் விட இஸ்லாம் மேலோன்குவதட்கு எம்மாலான அனைத்து முயற்சிகளை அல்லாஹ்வின் உதவியைக் கொண்டு செய்வோம் நான் இருந்து இஸ்லாம் மடிவதை விட நான் மடிந்து இஸ்லாம் வால வேண்டும் என்பதில் உண்மையான
ReplyDelete