தந்தையை இழந்த சிறார்களுக்கான நோன்பு பெரு நாள் புத்தாடை வழங்கும் நிகழ்வு
தந்தையை இழந்த சிறார்களுக்கான நோன்பு பெரு நாள் புத்தாடை வழங்கும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை 21.07.2013 மாலை 4.30 மணியளவில் மட்டக்களப்பு ஓட்டமாவடி மீராவோடை தாருஸ்ஸலாம் ஜூம்ஆப்பள்ளி வாயளில் இடம்பெற்றது.
கல்குடா தௌஹீத் ஜமாஅத்தின் சமூக சேவைப்பிரிவின் ஏற்பாட்டில் இடம் பெற்ற இந்நிகழ்வில் மாதாந்தம் உதவித்தொகை பெற்று வரும் தந்தையை இழந்த சிறார்களுக்கான நோன்பு பெருநாள் புத்தாடையினை ஜமாஅத்தின் பொதுத்தலைவர் அஷ்ஷேக் ஏ.எல்.பீர்முகம்மத் (காஸிமி) அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கல்குடா தௌஹீத் உலமாக்கள் ஒன்றியத்தின் தலைவர் அப்துர் ரஹ்மான் அஹ்கரி உள்ளிட்ட பெருத்தொகையான சிறுவர்களும்,தாய்மார்களும் கலந்துகொண்டனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் அமையப்பெற்றுள்ள கல்குடா தௌஹீத் ஜமாஅத் அமைப்பு தமது சமூக பணிகளின் தொடரில் குடிநீர்வசதியின்றி கஸ்டங்களையும்,துன்பங்களையும் எதிர்நோக்கியுள்ள ஏழைமக்களின் குடிநீர் தேவையை அறிந்து ஆயிரக்கணக்கான குடிநீர் கிணறுகள் மற்றும் குளாயிக்கினறுகள் நீர்தாங்கிகள் உள்ளிட பல்வேறு பட்ட உதவிகளை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.


Post a Comment