Header Ads



சவூதிஅரேபிய அரசிடமிருந்து சம்பளம் பெறும் சகல இமாம்களும் கண்காணிக்கப்படுவர்'

சவூதி அரேபிய அரசு கடந்த ஒரு தசாப்தத்தில் சுமார் 3,500 கடும் போக்கு மதப் போதகர்களை நீக்கியிருப்பதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் அறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது.

சவூதி அரசின் இஸ்லாமிய கடும்போக்கு தடுப்பு செயற்திட்டத்தின் கீழ் இந்த மதப் போதகர்கள் நீக்கப்பட்டிருப்பதாக கடந்த மே மாதம் வெளியிடப்பட்ட அமெரிக்க அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாக அல் ஹயாத் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. 

சவூதி அரசின் இந்த செயற்திட்டத்தின் கீழ் அரசிடம் இருந்து சம்பளம் பெறும் அனைத்து மதப் போதகர்களும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இதன்கீழ் சவூதி இஸ்லாமிய விவகார அமைச்சு 2003 தொடக்கம் இதுவரை 3,500 மதப் போதகர்களை நீக்கியுள்ளது.

எனினும் கடும் போக்கு நம்பிக்கை கொண்டவர்கள் மாத்திரம் நீக்கப்படவில்லை என்று சவூதி இஸ்லாமிய விவகார அமைச்சின் அதிகாரி தவ்பீக் அல் சித்ரி அல்ஹயாத் பத்திரிகைக்கு கூறியுள்ளார். 

குறைவான வாசிப்பு திறன், இஸ்லாமிய வாசகங்களை மனப்பாடம் இடுவதில் உள்ள குறைபாடு, முரணான இஸ்லாமிய சிந்தனை போன்றவையும் மதப் போதகர்கள் நீக்கப்படுவதற்கு காரணமாக அமைந்தது என்று அவர் சுட்டிக்காட்டினார். எனினும் சவூதி இஸ்லாமிய விவகார அமைச்சு கடும்போக்குவாத இணையதளங்கள் மற்றும் அமைப்புகள் தொடர்பில் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாக அமெரிக்க அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. Tn

2 comments:

  1. intha mannar kudumpatukku etiraka pesinal ellorum kadum pokalarkalthan entha perasai pidiththa saithankalukku

    ReplyDelete
  2. Kadum poakkaalargal yaarudaya maarkaththai pinpatrugiraargal enbazayum chonnaalthaney
    engalaippoanra muttalgalukku nallapadi puriyum?

    ReplyDelete

Powered by Blogger.