ஹிஸ்புல்லா தீவிரவாத இயக்கமே - ஐரோப்பிய ஒன்றியம் பிரகடனம்
லெபனானின் ஹிஸ்புல்லா இயக்கத்தின் ராணுவப்பிரிவை, தீவிரவாதிகள் இயக்கமாக ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளின் குழு 22-07-2013 முடிவு செய்தது. இதன்மூலம் இந்த ராணுவப்பிரிவைச் சேர்ந்த தனி நபர்களின் சொத்துகள் முடக்கப்படுவதோடு பயணத் தடைகளும் அவர்களுக்கு விதிக்கப்படுகின்றன. இந்த இயக்கத்தின் நிதி திரட்டும் முயற்சிகளும் தடை செய்யப்பட்டுள்ளன. இந்த முடிவு மத்தியக் கிழக்கு நாடுகளை குறித்த ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளின் முக்கியக் கொள்கை
மாற்றமாகக் கருதப்படுகின்றது.
ஐரோப்பியக் கூட்டமைப்பு நாடுகளின் மாதாந்திரக் கூட்டம் நடைபெற்றது. அதில், கடைசி நேர சந்தேகங்களைத் தாண்டி அனைத்து நாட்டு உறுப்பினர்களும் ஒரு மனதாக இந்த முடிவை எட்டியுள்ளனர்.
ஐரோப்பிய யூனியன் தீவிரவாதத்தை ஆதரிக்காது என்று தெளிவாக அறிவித்துள்ளது. ஐரோப்பிய மண்ணில் எந்த அமைப்பும் தீவிரவாதத்தை மேற்கொள்ள முடியாது என்று இங்கிலாந்து வெளியுறவுத்துறை செயலர் வில்லியம் ஹேக் தெரிவித்துள்ளார். ஜெர்மனியின் வெளியுறவுத்துறை அமைச்சர் கைடோ வெஸ்டர்வெல், ஐரோப்பிய யூனியனின் ஒற்றுமையைப் பற்றி அழுத்தமாகக் குறிப்பிட்டுள்ளார். டென்மார்க்கின் வெளியுறவுத்துறை அமைச்சர் பிரான்ஸ் டிம்மர்மான்ஸ், இந்த தடை முடிவு குறித்து தனது திருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

சிரியாவில் மக்களை படுகொலை செய்யும் விஷமிகள் ஹிஸ்புல்லாஹ் என்ற பெயருக்கே இவர்கள் இழுக்கு
ReplyDeletemsm farhanum vellaikaara naaykalum oraniyil
ReplyDelete