Header Ads



கோமா நிலையிலிருந்த கனூன் வபாத்தானார்

கிண்ணியா தளவைத்தியசாலையில் சத்திரசிகிச்சைக்குட்படுத்தப்பட்டு கோமா நிலையிலிருந்த தாய் இன்று திருகோணமலை பொது வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

குட்டிக்கராச்சியைச் சேர்ந்த 6 பிள்ளைகளின் தாயான கனூன் (வயது43) என்பவரே இன்று காலை 10 மணியளவில் உயிரிந்துள்ளார்.

இவர் 2012.12.28 ஆம் திகதி தனது ஏழாவது பிள்ளையை பிரசவிப்பதற்காக கிண்ணியா தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இதன்போது இவர் சத்திரசிகிச்சைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

அறுவைச் சிகிச்சையில் ஏற்பட்ட தவறு காரணமாக கோமா நிலையை அடைந்த இவர், மட்டக்களப்பு, திருகோணமலை, கண்டி முதலான வைத்தியசாலைகளுக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டபோதும் அங்கும் பலன் ஏற்படாததையடுத்து மீண்டும் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

ஏற்கெனவே 6 பிள்ளைகளையும் எவ்வித சத்திரசிகிச்சையுமின்றி சுகப் பிரசவமாகவே பெற்றெடுத்துள்ளார்.

இதற்கிடையில் சத்திரசிகிச்சையை மேற்கொண்ட நான்கு வைத்தியர்களுக்கு எதிராக திருகோணமலை மாவட்ட நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு அவர்களுக்கு எதிராக வழக்கு விசாரணைகளும் இடம்பெற்று வருகின்றன.

இவ்வாறு வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வரும் வேளையில், சுமார் 7 மாதங்களின் பின்னர் இப்பெண் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த பெண்ணின் ஜனாஸா திருகோணமலை பொது வைத்தியாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இவர் பற்றிய பல செய்திகளை ஜப்னா முஸ்லிம் இணையம் முன்னர் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

4 comments:

  1. How can you confirm that was a mistake occurred during the operation

    ReplyDelete
  2. இன்னாலில்லாஹி வஇன்னாஇலாஹி றாஜிஊன் அல்லாஹ்தாஆலா இவருக்கு மேலும் கஸ்டத்தைக் கொடுக்காமல் இவரின் உயிரை எடுத்தது நல்லத்துக்குதான்.

    ReplyDelete
  3. தவறு யார் செய்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்.
    ஆனால் நடந்தது என்ன என்பதனைக் கண்டறிவதற்கான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் இருக்கும் போது சத்திர சிகிச்சையில் ஏற்பட்ட தவறு காரணமாக கோமா நிலை ஏற்பட்டதாக எழுதியிருப்பது ஏற்புடையது அல்ல.
    மேலும், 43 வயது (35 வயதுக்கு மேல்), 6 வது குழந்தை (5 வது குழந்தைக்கு மேல்) எனும் இரு காரணிகளும் கர்ப்பிணிகள் கிளிக் பதிவேட்டில் இடர் நிலைமைகளாக குறித்துச் சொல்லப்பட்டிருக்கின்றன என்பதனைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
    தனது முந்திய பிள்ளைகளை சாதாரணமாகப் பெற்றெடுத்தவருக்கு சத்திர சிகிச்சை மூலம் 6வது பிள்ளை பெற்றெடுக்கும் நிலைமை ஏற்பட்டிருக்கின்றதென்றால் அங்கே தாயில் ஏதேனும் அசாதரண நிலைமை ஒன்று இருந்திருக்க வாய்ப்பு இருக்கின்றது. மேலும் அவ்வாறான ஒருவருக்கு சிகிச்சை அளிக்கும்போது சாதகமான பெறுதியைப் பெறுவது என்பது இடர்நிலைமை அதிகரித்த ஒரு விடயமாகும்.
    இங்கு குற்றம் சாட்டப்பட்டிருப்பவர்கள் மனிதர்களின் உடல் உயிர் நலனுக்காக இரவு பகல் பாராமல் கடமை புரியும் “மனிதர்கள்”. நமது வைத்திய சேவையின் வசதிகளுட்பட்ட வளங்களுடன் உச்சபட்ச சேவையை வழங்குபவர்கள். அவர்களது பணி மதிக்கப்படவும் பாதுகாக்கப்படவும் வேண்டும்.
    எனவே நீதி மன்றத் தீர்ப்பு வரும்வரை ஊடகங்கள் பொறுப்புணர்வுடன் செயற்படவேண்டும்.

    ReplyDelete
  4. வழக்கு பதிவாகி இருந்ததே என்ன நிலையோ அது எப்படியாகுமோ தெரியாது.

    சட்டத்தின் முன் குற்றவாளிகள் தப்பிக்கொள்ளக்கூடாது. வைத்தியர்கள் இதுபொன்ற தவறுகள் விடுவதனால் இன்று எத்தனையோ உயிர்ப்பலிகள் நடக்கின்றன இவைகள் மேலும் நடக்கக்கூடாது என்றால் உரிய முறையில் விசாரித்து தண்டைனை வழங்கப்படவேண்டும். இல்லையெனில் சமுகத்தில் இன்னும் பலவிடயங்களில் குழப்ப நிலை உருவாக நீதிபதிகளும் காரணமாகிவிடுவது மிகவும் கவலைக்குரியதும், அத்துடன் கொஞ்ச நஞ்சமிருந்த நம்பிக்கையையும் இழக்குமளவுக்கு ஓர் எடுத்துக்காட்டாகிவிடும்..
    சில வைத்தியர்களும் தாதியர்களும் ஈடுபாடற்ற போக்குடனும் வறட்டுக்கெளரவத்துக்காகவும் தாம் சில காரியங்களைச்செய்வதனால் பல உயிர்கள் பலியாகியுள்ளது, இவை சட்டத்தின் முன் கொண்டு வரப்படாமலும், சட்டத்தின் பிடியிலிருந்து தப்பியும் பல சம்பவங்கள் மக்கள் மனதில் பதிவாகியுள்ளன, மேற்குறிப்பிட்ட சம்பவங்கள் இனிமேலும் நடைபெறக்கூடாது என்பதுதான் மக்களது வேண்டுகோள் இது தற்போது ஒட்டுமொத்தமாக நீதிபதிகளின் கையில்தான் உள்ளது ஆகவே நீதியைச்சாகடித்துவிடாமல் ஏழை எழிய மக்களுக்கு நல்லதையே செய்ய மிகவும் தாழ்மையுடன் வேண்டுகின்றோம்.

    ReplyDelete

Powered by Blogger.