Header Ads



'கிண்ணியா, மூதூர் பிரதேசங்கள் கல்வியில் பின்னோக்கிச் செல்கின்றன'

(ஏ.எல்.ஜுனைதீன்)

     கிழக்கு மாகாணத்தில் அம்பாறை, மட்டக்களப்பு ஆகிய இரண்டு மாவட்டங்களையும்விட திருக்கோணமலை மாவட்டம் கல்வியில் தொடர்ந்து பின் நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது. இதற்கு இங்குள்ள பாடசாலை அதிபர்கள் தொடர்ந்தும் யுத்தத்தைக் காரணம் காட்டி தப்பித்துக் கொள்ள முயல்வதை எதிர்காலத்தில் நிறுத்திக் கொள்ள வேண்டும். யுத்தம் எம்மை விட்டுப் போனாலும் யுத்தத்தை நாம் இழுத்துப் பிடித்துக் கொண்டிருப்பது எமது சமூகத்திற்குச் செய்து கொண்டிருக்கும் பாரிய துரோகமாகும் என கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் எம்.ரீ. எம். நிசாம் தெரிவித்துள்ளார்.

     2010, 2011 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற க.பொ.த (உயர்தர) மற்றும் க.பொ.த (சாதாணதர) பரீட்சைகளில் கிழக்கு மாகாண பாட்சாலைகள் பெற்றுக் கொண்ட பெறுபேறுகளை மீளாய்வு செய்வதற்காக திருக்கோணமலை சென்ஜோஸப் கல்லூரியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.  கிழக்கு மாகாணக் கல்விப்பணிப்பாளர் நிசாம் தொடர்ந்து பேசுகையில் கூறியதாவது,

     திருக்கோணமலை மாவட்டத்தில் குறிப்பாக கிண்ணியா, மூதூர் ஆகிய பிரதேசங்கள் கல்வியில் பின்னோக்கிச் சென்று கொண்டிருப்பது கிழக்கு மாகாணத்தின் கல்வி வளர்ச்சியில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.

     இம் மாவட்டத்தில் நிலவி வரும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக இந்த வருடம் இறுதிக்குள் மாவட்ட சேவைத் திட்டத்தின் கீழ் 452 பேருக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட சேவைத் திட்டத்தின் கீழ் இந்நியமனங்கள் வழங்கப்படவுள்ளதால் 452 பேருக்குமான விண்ணப்பங்கள் இந்த மாவட்டத்திலிருந்து கிடைக்கவில்லை. இதனை பாடசாலை சமூகத்தினர்கள் மத்தியில் கூறுவதற்கு வெட்கமடைகின்றேன். உங்கள் இப்பிரதேசங்களுக்கு குறைந்தபட்சம் ஆசிரியர் தொழிலுக்கு தகுதியுடையவர்களையாவது நாம் உருவாக்கத்தவறி விட்டோம்.

    இப்படியான நிலையில் நாம் அம்பாறை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களிலிருந்து அவற்றை நிரப்ப வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகின்றோம். இந்த விடயம்  திருக்கோணமலை மாவட்டம் கல்வியில் பின் தங்கி இருக்கின்றது என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும். இவ்வாறு அவர் கூறினார்.

4 comments:

  1. உண்மையிலேயே வெற்கப்படவும்வேதனைப்படவும் வேண்டியவர்கள் இம்மாகாணத்தின் ஆசிரியர் சமுகமே.

    ReplyDelete
  2. பொதுவான சமூகப் பிரச்சினைகளையும் பேச வெளிக்கிட்டிருக்கும் நிஷாம் சேருக்கு நன்றிகள். உயர் பதவியில் உள்ள முஸ்லிம்கள் சுயநலவாதிகள் என்றும் ஒரு விமர்சனம் உள்ளது.

    ReplyDelete
  3. பொதுவான சமூகப் பிரச்சினைகளையும் பேச வெளிக்கிட்டிருக்கும் நிஷாம் சேருக்கு நன்றிகள். உயர் பதவியில் உள்ள முஸ்லிம்கள் சுயநலவாதிகள் என்றும் ஒரு விமர்சனம் உள்ளது.

    ReplyDelete
  4. மாகாணக் கல்விப் பணிப்பாளர் தரவுகளை நன்றாக விளங்கமல் பேசுகின்ற ஒருவர் கிண்ணியா, மூதுர் பிரதேச மாணவர்கள் ஆசிரியர் தெழிலை விரும்பதவர்கள் என்பது உண்மை.கடந்த மூன்று மாதத்திற்கு முன்னர் ஆசிரியர் பேட்டிப் பரீட்சையில் 3000 பட்டதாரிகள் திருகோணமலையில் இருந்து எழுதினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது . தற்போது பட்டதாரி பயிலுனர்களாக 19 அரச திணைக்களங்களில் வேலை புரிகின்றர்கள் என்பது உண்மை . ஆனால் தரவுகள் தெரியாத உங்களைப் போல ஒரு சில மாகாணப் பணிப்பாளர்கள் இருப்பதால்தான் கல்வியில் பின்தங்கிய நிலையில் ஒரு சில மாவட்டங்கள் இன்னும் உள்ளது. ஆசிரிய பற்றக் இலங்கையில் இல்லை என்பது உண்மை ஏன் எனின் 18 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற வீகிதம் உள்ளது என்பது கல்வி அமைச்சின் தரவு. ஆசிரியராக இருக்கும் காலத்தில் கற்பிக்கதவர்கள். எப்போதும் குறை கூறுவது வழக்கம். தங்களது கடமையினை சரிவரச் செய்யுங்கள் முதலில் தரவுகளையும் தகவல்களையும் அறிந்து பேசுங்கள் . உங்களை விட சிறந்தவர்கள் அறிவாளிகள் இருக்கின்றார்கள் என்பதை உணர்ந்து பேசுங்கள். நன்றி

    ReplyDelete

Powered by Blogger.