பெரியாற்றுமுனையில் பள்ளிவாயலுக்கான அடிக்கல் நாட்டு
(அபூ அஹ்ராஸ்)
கிண்ணியா பெரியாற்றுமுனை முனைப்பிரதேசத்தில் பள்ளிவாயல் அமைப்பதற்கான அடிக்கல் இன்று 04-07-2013 கிண்ணியா நகரசபை நகரபிதா டொக்டர் எம்.எம்.ஹில்மி தலைமையில் நாட்டிவைக்கப்பட்டது.
அல் ஹிக்மா இஸ்லாமிய அமைப்பு இதற்கான நிதியினை வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இங்கு உரையாற்றிய நகரபிதா ஹில்மி இப்பள்ளிவாயல் அமைப்புக்கு என்னாலான உதவிகளை வழங்குவதோடு இவ்வாரான அமைப்புப்பணிகளுக்கு உதவி வழங்கக்கூடிய அமைப்புக்கள் மேலும் உதவிகளை வழங்க வேண்டும். அத்தோடு இவற்றை எவ்வாறு நாம் பாதுகாக்கவேண்டும் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். என் அதிகாரத்திற்கு உட்பட்ட விடயங்களில் என்னாலான ஒத்துழைப்புக்கனை வழங்க நான் என்றும் கத்திருக்கின்றேன். என நகரபிதா தெரிவித்தார். நிகழ்வில் சமுர்த்தி சங்க உத்தியோகத்தர்கள், அல் ஹிக்மா உறுப்பினர்கள், ஏனைய அதிகாரிகள் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Post a Comment