நிந்தவூர் அல் அஷ்ரக் தேசிய பாடசாலையின் வீதிப்பக்க சுவர் சித்திரங்கள் புதுப்பிக்கும் பணி
நிந்தவூர் அல் அஷ்ரக் தேசிய பாடசாலையின் 10ஆம் வருட சித்திர பாடம் கற்கும் மாணவர்கள் அப்பாடசாலையின் பிரதான வீதிப்பக்க சுவரில் பொன்விழா கொண்டாட்டங்களின் போது ஊர் அமைப்புக்களால் வரையப்பட்ட கருத்துச்சித்திரங்களை புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சமுதாயத்தில் பல்வேறுபட்ட துறைகளில் விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடிய இச்சித்திரங்கள் கிட்டத்தட்ட 18 ஆண்டுகளுக்கு முன்னர் வரையப்பட்டவை.
அதிபர் பிரதி அதிபர் ஆகியோரது ஆலோசனைப்படி பயிற்ரப்பட்ட சித்திர ஆசியரான ஐயூப் அவர்களது நேரடி மேற்பார்வையின் கீழ் நடைபெறும் இம்முயற்சி பழையவை புதுப்பிக்கப்பட உதவுவதுடன் மட்டுமன்றி சித்திரம் கற்கும் மாணவர்களது திறன்கள் வெளிப்படுத்தப்படவும் நல்ல வாய்ப்பாக இருக்கின்றது.
இச்சித்திரங்களில் ஒன்று 2004ஆம் வருடம் ஏற்பட்ட சுனாமியின்போது அம்பாந்தோட்டை வைத்தியசாலையில் கடமைபுரிந்து குடும்பத்துடன் வபாத்தான டாக்டர் AMM அஷ்ரப் அவர்களால் வரையப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.. குறித்த மாணவர்கள் பாடசாலையினுள் கண்டங்களின் வரைபடங்களையும்,இலங்கையின் வரைபடத்தையும் பெரிதாக வரைந்து சகலரது பாராட்டையும் பெற்றுள்ளனர்.


puthiyathoru muyatsi,paadasaalai maanavarkale ivvaaraana siththirangalai varaithal matrum athatku avarkalathu aasiriyar valikaattuthal enpana perithum paaraattappadavendiyathu en saarpil enathu manamaarntha vaalthukkalaiyum nanrikalaiyum theriviththukkolkinren - ur IBRAHIM Ahsan (Ahsan mim)
ReplyDelete