முஸ்லிம்களுடன் கண்மூடித்தனமாக செயற்படக்கூடாது - பாராளுமன்றத்தில் ஹிஸ்புல்லாஹ்
(நேற்று இலங்கை நாடாளுமன்றத்தில் பொருளாதார பிரதியமைச்சர் அல்ஹாஜ் எம்.எல்.ஏ.எம் .ஹிஸ்புல்லாஹ் மின்சாரத்திருத் திச்சட்மூல விவாதத்தில் ஆற்றிய உரையின் சுருக்கம்.)
யுத்த்திற்குப் பின்னர் ஆசியாவின் ஆச்சர்யமிக்க நாடாக இலங்கையை கட்டியெழுப்புகின்ற மாபெரும் பணியிலே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்களுடன் இணைந்து நாங்கள் பயணித்துக்கொண்டிருக்கிறோம். இந்த நாட்டை கட்டியெழுப்ப முனைகின்றபோது இனவாதத்தையும் மத வாதத்ததையும் கிழப்பி இனங்களுக்கிடையிலும் மதங்களுக்கிடையிலும் பிரச்சினைகளை உண்டுபண்ணி மீண்டும் இந்த நாட்டிலே ஒரு இரத்தக்களரியை ஏற்படுத்துவதற்கும இந்த நாட்டிற்கு அபகீர்த்தியை உண்டுபண்ணுவதற்கும் சில தீய சக்திகள் முயன்றுகொண்டிருக்கின்றன.
அந்தச்சூழ்நிலைகளிலிருந்து இந்த நாட்டை நாம் காப்பாற்றியாக வேண்டும்.கடந்த பல மாதங்களாக இந்தநாட்டிலே முஸ்லிக்களுக்கெதிராகவும் இஸ்லாம் மதத்திற்கெதிராகவும் சில தீய சக்திகள் எடுத்துவரும் நடவடிக்கைகள் முஸ்லிம் மக்கள் மத்தியிலே அச்சத்தையும் கவலையையும்ஏற்படுத்தியிருக்கின்றன.
ஆகவே இந்த நாட்டை நாங்கள் கட்டியெழுப்ப வேண்டுமாகவிருந்தால் இந்த நாடு வளர்ச்சியடைந்த நாடாக மாறவேண்டுமென்றால் 30வருடங்களாக இழந்திருந்த அந்த ஒற்றுமையை மீண்டும் கட்டிக்காக்க வேண்டும் இந்த நாட்டிலே எல்லா இனங்களும் ஒற்றுமையாக வாழ்கின்ற ஒரு சூழ்நிலை உருவாக்கப்படவேண்டும். சிறுபான்மை மக்களது உரிமைகள் மற்றும் அவர்களது மதஸ்தலங்களையும் பாதுகாக்கின்ற முழுப்பொறுப்பும அரசாங்கத்திற்கும் பெரும்பான்மை மக்களுக்கும் இருக்கின்றது. அந்தவகையில் இந்த அரசாங்கம் அவற்றை உரிய முறையில் செயயவேண்டும்.
கடந்த பல மாதங்களாக முஸ்லிமகளுக்கெதிரான பல்வேறு சம்வங்கள் முஸ்லிம்களுக்கெதிரான கடும் போக்குள்ள இனவாத அமைப்புக்கள் மேற்கொண்டுவரும் தொடரான அச்சுறுத்தல்கள் தொடர்நிகழ்வாக இடம் பெற்றுக்கொண்டிருப்பதை கடந்த 10 நாட்களுக்குள் நடைபெற்ற சம்பவங்கள் உணர்த்துவதாக உள்ளன.
கிராண்டபாஸ் பள்ளிவாயல் பிரச்சினை மஹியங்கனை பள்ளிவாயல்தாக்குதல் தெமட்டகொடயில் மாடுஅறுக்கும் மடுவத்திற்குள் இறைச்சிஏற்றும் லொறி எரிக்கப்பட்டமை போன்ற சம்பவங்கள் மற்றும் மாவனல்ல பகுதியிலுள்ள தெவனகல பிரதேசத்தது முஸ்லிம்களை வெளியேறக்கோரும் கூட்டம் என்பன கடந்த 10 நாட்களுக்குள ;முக்கிய சம்பவங்களாகும்.தாக்குதலுக்குளன்ளான மஹியங்கனை ஜூம்ஆ பள்ளிவாயல் இன்று மூடப்;பட்டுள்ளது.மாகாண சபை அமைச்சர் ஒருவர் நேரடியாசக்சென்று அந்தப்பள்ளிவாயிலை மூடுமாறு உத்தரவிடுகினற நிலைமையைக்கண்டு முஸ்லிம் மிகவும் மனவேதனையடைகின்றனர்.
இத்தiகைய செயல்கள் நிகழ்வுகள் முஸ்லிம்கள் மத்தியில் மாத்திரமல்ல முஸ்லிம்கள் அல்லாதவர்கள் மத்தியிலும் மிகுந்த வெறுப்பை ஏற்படுத்தியுள்ளன.இவைகள் மிகவும் கீழ்த்தரமான செயல்களாகும்.மஹியங்கனை பள்ளிவாயல் தாக்கப்பட்டபோது பள்ளிவாயல் அமைந்துள்ளவீதியில் சிறிது நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டு பின்னர் மின்சாரம் சீர் செய்யப்பட்டுள்ளது.இதனையொரு திட்டமிட்ட செயலாகவே கருதவேணடியுள்ளது. எதுஎவ்வாறாயினும் கடந்த 20வருடகாலமாக ஐவேளைத்தொழுகைக்கும் ; ஜூம்ஆ தொழுகைக்கும் பயன்படுத்தப்பட்டுவந்த அந்தப்பள்ளிவாயல் இந்தப்புனிதமான நோன்பு மாதத்திலே ஜூம்ஆ தொழுகை நடாத்தப்படாமல் இழுத்து மூடப்பட்டிருப்பது இலங்கையில் வாழுகின்ற முஸ்லிம்களை மாத்திரமின்றி முழு உலகிலும் வாழுகின்ற அனைத்து முஸ்லிம்களுடைய மனங்களையும் மிகவும் புண்படுத்தியுள்ளது.
இத்தகைய விடயங்கள் எந்தவிதமான பிரச்சினைக்கும் உட்படாமல் சமாதானமாக மிகவும் அமைதியான முறையிலேயே தீர்க்கப்படவேண்டும் எவ்விதமான பிரச்சினைகளுக்கும் உட்படுத்தாமல் இந்தநாட்டிலுள்ள இனங்கள் மீண்டும் சீர்குலைந்துவிடாமல் இந்தப்பிரச்;சினைக்கு தீர்வுகாணப்பட்டு ஒறுமையுடன் வாழவேண்டுமென நாங்கள் ஆசைப்படுகின்றேநாம்.அரசாங்கம் இந்த விடயங்களில் கவனம் செலுத்த வேண்டும்.
இந்த நாட்டை முன்னேற்றமடைந்த ஓற்றுமைப்பட்ட வளர்ச்சியடைந்த ந நாடாக கட்டியெழுப்பி அபிவிருத்தி செய்யவேண்டுமாயின் நாம் எல்லோரும் ஒற்றுமைப்படவேண்டும்.ஒற்றுமைப்பட்ட ஒரு சமுகத்தினால் மட்டுமே இந்தநாட்டை கட்டியெழப்பமுடியும்.
ஆகவே இந்த நாடு முன்னேற்றமடைவதற்காக சகல இனமக்களும் ஒற்றுமையாக வாழவேண்டும்.இது தொடர்பாக அரசாங்கம் விரைவிலே நடவடிக்கை எடுக்கவேண்டும்.பாதுகாப்புதரப்பினரால் எங்களுக்கு பல உறுதி மொழிகள் வழங்கப்படுகின்றன.ஆனால் அந்த உறுதி மொழிகள் எதுவும் இதுவரையில் நிறைவேற்றப்பட்டதாக இல்லை. அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவும் அமைச்சர்களும் அரசியல் தலைமைகளும் கல்விமான்களும் இணைந்து இந்த நாட்டிலே மீண்டும் இனங்களுக்கிடையிலும் மதங்களுக்கிடையிலும் கலவரங்கள் ஏற்பட்டுவிடக்கூடாதென்ற காரணத்திற்காக மிகவும் கவனமாக எமது முஸ்லிம் சமுகத்தை அமைதிப்படுத்தி வழிநடாத்திக்கொண்டிருக்கிறார்கள்.
இத்தகைய நிலைமை நீடித்துக்கொண்டிருக்கமுடியாது.இது தொடர்பாக அரசாங்கம் உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும்.சம்பந்தப்பட்வர்கள் கைது செய்யப்படவேண்டும்.இந்ந நாட்டிலுள்ள அனைத்துமக்களுக்கும் ஒரே சட்டம் அமுல்படுத்தப்படவேண்டும்.
முஸ்லிம ஒருவருக்கு இந்த நாட்டிலே பள்ளிவாயல் அமைத்து தொழுவதற்கான பூரண உரிமை இருக்கின்றது.கடந்த 20வருடஙட்களாக தொழுகை நடாத்தப்படடுவந்த மஹியங்கனை பள்ளிவாயலை அமைச்சர் ஒருவர் நேரடியாகச்சென்று மூடும்படி சொன்னதால் அப்பள்ளிவாயல் மூடப்பட்டுயள்னளது இன்று நாட்டிலுள்ள இத்தகைய சுழ்நிலையை புரிந்து கொண்டு பாதுகாப்பு தரப்பனர் உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.
சகல சமுகத்தவர்களும் அவர்களுடைய அரசியல் சமுக மத உரிமைகளை பேணிப்பாதுகாப்பாற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.அரசாங்கமும் பாதுகாப்பு தரப்பினரும் தொடர்ந்தும் கண்மூடித்தனமாக இதே நிலையை கடைப்பிடிக்காமல் உடனடியாக சம்பந்தப்படவர்களுக்கெதிராக சடட்நடவடிக்கை எடுத்து இந்த நாட்டிலே சட்டத்தையும் அமைதியையும் நிலைநாட்டி சகல சமுகங்களும் ஒற்றுமையுடன் நிம்மதியாகவும் வாழ்வதற்குரிய சூழ்நிலைகளை உருவாக்வேண்டும்.கடந்த 30ஆண்டுகளுக்குப்பின்னா ;ஆயிரக்கணக்கான பாதுகாப்பு படையினர் இரத்தம் சிந்தி உயிர்hப்பலி கொடுத்து பெற்ற சுதந்திரத்தைப்பேணிப்பாது காப்பதற்கு எல்லோரும் முன்வரவேண்டுமென்று கேட்டுக்கொள்கின்றேநன்.இவ்வாறு நேற்று பிரதியமைச்சர்

சில சக்திகள் செயல்படுகின்றன என்று சொல்கின்றீரே அதே சில சக்திகள் செய்வதை ஏன் முஸ்லிம்கள் தூக்கிப்பிடிக்கவேண்டும் என்று ஜனாதிபதி சொல்கின்றாரே அது என்ன விடயம்.
ReplyDeleteAlhamdulillah nice speech may allah bless you. our other ministers and MP's should talk in same way in parliament.
ReplyDeleteAfter long time meaningful Speech in the parliament against government.
ReplyDeleteWas this speech got prior approval from president/ Basil or not ?
However, Well done!!!
இதென்னவோ வட மகாகண எலெக்ஷனுக்காக நாடாளுமன்றத்தில் பேசி பயிற்சி எடுத்தது போல் இருக்கிறது..?
ReplyDeleteமஹ்யங்கன பள்ளிவாசல் மூடப்பட்டிருப்பது, பேச்சுவாத்தைகள் நடாத்தித் தீர்க்கப்பட வேண்டிய ஒரு பிரச்சினையால் அல்ல. அது பலவந்தம். பலாத்காரம்.
ஒரு குழுவினரால் பலவந்தமாக பலாத்காரம் செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு பெண்ணை நாமெல்லாம் சுற்றி நின்றுகொண்டு 'இது பேசித் தீர்க்கப்பட வேண்டிய விடயம்' என்று சொல்லிக் கொண்டிருப்பது போல் இருக்கிறது, பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவின் பேச்சு.
அரசாங்கத்தின் சம்பளத்தைப் பெற்றுக் கொண்டு பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருக்கும் கோட்டாபய ராஜபக்ஷ, ஏன் எனது கடிதத்திற்கு இத்தனை நாளாக நடவடிக்கை எடுக்கவில்லை? என்று ஒரு வார்த்தை கேட்டிருந்தால் இவருக்கு ஒரு சபாஷ் போட்டிருக்கலாம்.
கீறல் விழுந்த ரெக்கோட் மாதிரி ஒத்துமை, சமாதானம், நாட்டைக் கட்டியெழுப்புதல் என்றே இவருக்கு ஒதுக்கப்பட்ட நேரம் கரைந்திருக்கிறது.
-புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-
SIR, IPPO THAAN THOONGI ELUMBI IRUKKARU,
DeleteNEENGE SUMMA IRUNGA NANA
weldone dear hizbullah,
ReplyDeletedon't need to silence in these type of issue's, we should be be work out against that recitalist, they work with very clear political shadows, so they have plan for every our reaction. so wanna politicalize in this issue's, example we want to prepare with all Muslims politicians with his people the massive demonstration against bodu bala sena and his relatives, if we doing we can avoid any individuals violence and their illegal arrest, we wanna must ready to action role,