Header Ads



மஹியங்கனை பள்ளிவாசல் விவகாரம் - முஸ்லிம் எம்.பி.க்கள் ஜனாதிபதியை சந்திக்க தீர்மானம்

மஹியங்கனை பள்ளிவாசல் அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்டுள்ள விவகாரம் குறித்து ஆராய்வதற்காக இன்று புதன்கிழமை பாராளுமன்றத்தில் சற்றுநேரத்திற்கு முன்னர் முஸ்லிம் எம்.பி.க்கள் கூடி ஆராய்ந்துள்ளனர்.

இதன்போது உடனடியாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை சந்தித்து மஹியங்கனை பள்ளிவாசல் விவகாரம் குறித்து கலந்துரையாடுவதெனவும், பள்ளிவாசல் திறக்கப்பட வேண்டுமென ஜனாதிபதியிடம் வலியுறுத்துவது எனவும் முஸ்லிம் எம்.பி.க்கள் தீர்மானித்துள்ளனர்.

அநேகமாக இன்று ஜனாதிபதியை முஸ்லிம் எம்.பி.க்கள் இதுதொடர்பில் சந்திப்பரென எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டத்தில் பங்கேற்ற முஸ்லிம் எம்.பி.க்கள் இதை ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு தெரிவித்தனர்.

இந்தக் கூட்டத்தில் 18 ஆளும்கட்சி முஸ்லிம் எம்.பி.க்கள் கலந்து கொண்டிருக்க வேண்டும். இருந்தபோதும் 15 முஸ்லிம் எம்.பி.க்கள் மாத்திமே இக்கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.

7 comments:

  1. இந்த முஸ்லிம் எம்.பி களுக்கு தலைவரை சந்திக்கத்தான் முடியும். ஆனால் சாதித்து செயல்படுத்த முடியாதே............. தீவிர வாத சக்திகளை இயக்கும் கடிவாளம் தலைவர் கய்யிளல்லவா இருக்குறது.

    அறிக்கை விடுவது நம் எம். பி களின் செயல் . அட்டகாசாம் புரிவது நம் தலைவன் செயல்.

    ReplyDelete
  2. தயவு செய்து கூட்டத்தில் கலந்து கொள்ளாத 3 எம் பீக்கலின் பெயர்களை அறியத்தரவும்..
    இவர்கள் தான் மஹா நன்றி கெட்ட படு துறோகிகள்..!!

    ReplyDelete
  3. இப்பவே மூணு முண்டங்கள் தலைமறைவாகி விட்டன. ஜனாதிபதியைச் சந்திப்பதற்கிடையில் எத்தனை பேர் இந்தா வாறன் என்று விட்டு ஆள்மாறப் போகிறார்களோ தெரியவில்லை.

    அப்படி ஜனாதிபதியைச் சந்தித்தாலும் இவர்கள் தங்களுடைய அற்பத்தனமான சில்லறைச் சலுகைக் கோரிக்கைகளைப் பற்றிப் பேசாமல் மஹியங்கனை பள்ளிவாசலைத் திறப்பது தொடர்பாகவே ஒருமித்தும், உரத்த குரலிலும் பேச வேண்டும்.

    ஜனாதிபதி ஒரு வேளை இதை ஏன் முஸ்லிம்கள் தூக்கிப் பிடிக்க வேண்டும். நீங்கள் எங்களுடைய பிள்ளைகளுக்கு ஆபாசப் படம் காட்டுவதை நாங்கள் பெரிதாகக் கணக்கெடுக்கின்றோமா? என்றும் இவர்களிடம் கேட்கலாம். அதற்கான தக்க பதிலுடன் தயாராகவே செல்லுங்கள்.

    -புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-

    ReplyDelete
  4. நீங்கள் சந்தித்து எதுவும் நடைபெற போவதில்லை =0

    ReplyDelete
  5. why president dosnt know mahiyangana matter they are going to remind him his first presidential election won by Muslims vote mahinda may forget but we Muslims still remember will see next election

    ReplyDelete
  6. எப்படி போசுவதன்று ஒரு ஒத்திகை பார்த்துக்கொள்ளவும் .ஏனொனில் நம்மவர்களில் அரசியல் சானக்கியம் உள்ளவர்கள் யாருண்டு.அந்தாள் ஏதாவது எடக்குமொடக்கான பதிலை கொடுத்து இவர்களின் வாயை அடைத்துவிடுவார்.அல்லது வோறு எங்காவது பார்த்துக்கொண்டிருப்பார்.சமுதாயத்திற்காக போசுங்கள்.

    ReplyDelete

Powered by Blogger.