கம்பளை சாஹிரா கல்லூரி அதிபர் அலுவலகத்தில் கொள்ளை
(எம்.எம்.எம். ரம்ஸீன்)
கம்பளை சாஹிரா கல்லூரியின் அதிபர் அலுவலகத் தொகுதி 01.07.2013 கொள்ளையிடப்பட்டுள்ளது.
கம்பளை சாஹிரா கல்லூரியின் அதிபர் அலுவலகத் தொகுதிக்குள் பின்கதவு ஜன்னலை உடைத்துக் கொண்டு புகுந்த கொள்ளையர்கள் பத்தொன்பதாயிரம் ரூபா பணத்தை சுருட்டிக் கொண்டு அலுவலக அலுமாரிகள் மற்றும் பாசாலை ஆவணங்கள் வைக்கப்பட்டிருந்த அலுமாரிகளையும் உடைத்துள்ளனர். இக்கொள்யைர்கள் சுமார் 35 அடி உயரமான கட்டிடத்தில் மிக சுட்சுமமாக ஏறி இரண்டாம் மாடியில் உள்ள அலுவலக அறையினுள் புகுந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
இக்கொள்ளையர்கள் பாடசாலையின் முக்கிய ஆவணங்களை கொள்ளையடிக்க வந்திருக்கலாம் என்று நம்பப்படுகின்றது. இது தொடர்பாக கம்பளை பொலிஸ் நிஜலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டை தொடர்ந்து கம்பளை பொலிசார் விசாரனைகளை ஆரம்பித்துள்ளனர்.
.jpg)
Post a Comment