முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் ஹஸன் அலிக்கு ஒரு பகிரங்க மடல்
அஸ்ஸலாமு அலைக்கும்!
நாட்டில் 17 பள்ளிவாசல்கள் மதவெறிபிடித்த காடையர்களால் சேதமாக்கப்பட்டுள்ளன.ஆனால் அரசாங்கம் எதுவித நடவடிக்கைகளையும் இதுவரை எடுக்காதது வேதனையளிப்பதாக நீங்கள் கூறிய செய்தியைப்பார்த்து மிகவும் ஏமாற்றமடைந்தோம்.
இன்று முஸ்லிம்களுக்கெதிராக மேற்கொள்ளப்படுகின்ற வெறுப்புப் பிரச்சாரங்களுக்கும் அதன் தொடரான நமது மத, கலாச்சார பொருளாதார மற்றும் அரசியல் கட்டமைப்புக்கள் மீதான வன்முறைகளுக்கும் பௌத்த பேரினவாதம் அல்லது பொதுபலசேனா அல்லது மதவெறிபிடித்த காடையர்களே காரணம் என்று திரும்பத்திரும்ப கூறுவதன்மூலம் இவை அத்தனைக்கும் மூலகாரணமான இந்த அரசாங்கத்தை பாதுகாக்க அல்லது தப்பவைக்க நமது அரசியல் தலைவர்கள் முற்படுவது முஸ்லிம்கள் மத்தியில் பலத்த சந்தேகங்களையும் எதிர்காலம் குறித்த பெரும் அச்சவுணர்வையும் ஏற்படுத்தியுள்ளது. அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவரே நேரடியாகச் சென்று பள்ளிவாசலை மூடுமாறு அச்சுறுத்தல் விடுத்ததன் பின்னரும் நமது தலைவர்கள் இந்த அரசாங்கத்துக்கு முக்காடுபோட முற்படுவதன் மர்மம் என்ன?
17 பள்ளிவாசல்கள் சேதமாக்கப்பட்டும்,பல பள்ளிவாசல்கள் இழுத்து மூடப்பட்டும்,இன்னும் முஸ்லிம்களின் மார்க்க அனுஷ்டானங்களுக்கு பகிரங்கமாகத்தடை விதிக்கப்பட்டும் இதுவரை எதுவித நடவடிக்கைகளும் எடுக்காத இந்த அரசாங்கத்துக்கெதிராக அதற்கு முண்டுகொடுக்கின்ற பங்காளிக்கட்சி என்ற வகையில் நமது கட்சி இதுவரை எடுத்த நடவடிக்கைகள் என்ன? (வெறும் உப்புச்சப்பற்ற அறிக்கைகளைத் தவிர)
எட்டு பாராளுமன்ற உறுப்பினர்களைக்கொண்ட நமது கட்சியினால் குறைந்தது பாராளுமன்றத்தில் ஒரு கவனயீர்ப்புப் பிரேரணையையாவது இதுவரைக்கும் கொண்டுவர முடியாமல் போனது ஏன்? இதனைக் கூடச்செய்ய முடியாது என்றால் நாங்கள் மேடைகளில் தொண்டை கிழியப்பேசுகின்ற முஸ்லிம் சமூகத்தின் உரிமைகள்,பாதுகாப்பு,போராட்டம் இவைகளின் அர்த்தம்தான் என்ன?
இந்த அரசாங்கத்துக்கு முண்டுகொடுக்கும் பங்காளிகளாக (?) நீங்கள் இருக்கும் வரைக்கும் பௌத்த பயங்கரவாதத்தின் பின்புலத்துடன் இந்த அரசாங்கம் முஸ்லிம்களுக்கெதிராக மேற்கொள்ளும் அத்தனை அநியாயங்களுக்கும் நீங்களும் பகிரங்கமாக துணைபோகின்ற பங்காளிகள் என்ற முஸ்லிம் சமூகத்தின் நியாயமான குற்றச்சாட்டை நீங்கள் ஏற்றுக்கொண்டாக வேண்டும்.
அரசாங்கத்துக்குள் உங்களை வைத்துக்கொண்டே முஸ்லிம்களுக்கெதிரான வன்முறைகளை மிகவும் வேகமாகவும் லாவகமாகவும் அரங்கேற்றி வருகின்ற இந்த அரசாங்கத்தின் மறைமுக நிகழ்ச்சி நிரலில் முஸ்லிம் காங்கிரஸை அழித்து விடுவதும் அதன் மூலம் முஸ்லிம் சமூகத்தின் அசியல் சக்தியை பலவீனப்படுத்துவதும் ஒன்று என்பதை மறந்து விடாதீர்கள். எதுவுமே செய்ய இயலாதவர்களாக உங்களை முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் காட்டுவதன் மூலமாக முஸ்லிம் காங்கிரஸின் மீது முஸ்லிம் மக்களை நம்பிக்கையிழக்கச்செய்து கட்சியை முஸ்லிம்கள் மத்தியிலிருந்து அழித்து விடுகின்ற இந்த அரசின் நயவஞ்சகத்திட்டத்திற்கும் நீங்கள் தெரிந்து கொண்டே துணைபோய்க்கொண்டிருக்கிறீர்கள் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.
எனவே முஸ்லிம் சமூகத்தின் மொத்த இருப்பையும் இலக்கு வைத்து திட்டமிட்டமுறையில் இந்த அரசு மேற்கொண்டுவரும் அநியாயங்களை இந்த அரசாங்கத்தின் பங்காளிகளாக இருந்துகொண்டு உங்களால் தடுத்து நிறுத்த முடியவில்லையென்றால் தயவு செய்து அந்த அநியாயங்களுக்குத்துணை போகாமல் உடனடியாக இந்த அரசாங்கத்துக்கு வழங்குகின்ற ஆதரவை விலக்கிக்கொண்டு வெளியேறி மாற்று நடவடிக்கைகளைப்பற்றி சிந்திக்குமாறு கட்சியின் நலனிலும், சமூகத்தின் நலனிலும் கொண்ட கரிசனையின் பேரால் இந்தப்புனித ரமழான் மாதத்தில் வேண்டுகோள் விடுக்கிறேம்."
அபுஸமா
.jpg)
they never leave from the government.they like the parliment seats and canteen
ReplyDeleteWhy can't to be Muslim congress as TNA systerm and they will achieve their target, Now they will get Jaffna as their ruling region. So, that they secrified and suffered a lot about their luxurious without joining with Ruling Party
ReplyDeleteபதவிகளை விட்டு விட விரும்பாத முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கெல்லாம் இவ்வாறான பகிரங்க மடல்கள் எல்லாம் சும்மா பப்பட மடல்கள்தான்.
ReplyDelete-புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-
உ ங்கள் ஆதங்கம் உண்மையானது. அதுவேதான் அனைத்து முஸ்லிம்களினதும் ஆதங்கமும்கூட . ஆனால் , அரசில் இருந்து வெளியேறி வந்துவிடுவதால் இன்னும் பயங்கரமான விளைவுகளுக்கு முகம் கொடுக்கவேண்டி இருக்கும் (அ.) கட்சி சில அல்லது பல பா.உ களை பறிகொடுக்கவேண்டி வரும் .(ஆ ) பேரினவாதிகள் அதனையே சாட்டாக வைத்து ஆட்டத்தை அதிகரி ப்பார்கள் (இ ) கிழக்கு மாகாண சபையில் உறுப்பினர்களை வாங்கி அரசின் முழு அதிகாரத்திகுள் அது கொண்டுவரப்படும் பிறகு நடப்பது என்ன என்பதை விபரிக்கவே தேவையில்லை .(ஈ ) அப்படி நடவாமல் நம் உறுப்பினர்களை காப்பற்றிக்கொண்டாளும் தமிழர்களுடன் சேர்வதால் முஸ்லிம்களும் பிரிவினை வாதத்திற்கு துணை போய் விட்டார்கள் என்று பல செனாவும் , ஹெலுருமையும் , விமல் வீரவன்சாவும் கூக்குரலிட வசதியாகிவிடும் (உ) வடக்கில் தமிழர் ஆட்சி அமைப்பது உறுதி, கிழக்கிலும் அதவே நடந்துவிடும் .அடுத்த் கட்ட நடவடிக்கை யாக நிபந்தனைகள் இன்றி வடகிழக்கு இணைக்கப்படலாம் . முஸ்லிம்களின் பெரும்பான்மைபலம் கிழக்கில் இல்லாது போய்விடும் ( தமிழர்களை எவ்வாறு முழுமையாக நம்பலாம் ? ). .........இவைபோல நிறைய பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கவேண்டி வரும் . இந்த கசப்பான உண்மைகளை ஹசன் அலி சேர் புரிந்துகொண்டுள்ளதால் தான் இப்போது தலைவரை போலவே அவரும் அரசு வெளியேற்றும் வரை நாங்களாக வெளியேற மாட்டோம் என்று இப்போது சொல்கிறார் .அரசு எங்களை வெளியேற்றுவதட்கும் , நாங்களாக வெளியேறுவதற்கும் இடையில் பாரிய வித்தியாசங்கள் உண்டு .உங்கள் ஆதங்கம் உண்மையானது, ஆனால் மு கா விற்கு இது சோதனைக் காலம் .முள்ளில் இருந்து சேலையை இழுத்துக் கழற்றினால் சேதம் முள்ளுக்கு அல்ல சேலைக்கே !
ReplyDeleteரவூப் ஹஸீர்
rauf hakkeem he is not leader worst fellow must remove from leadership other whys better we want to kill him. for community one person die nothing happen he is not suitable for leader.
ReplyDeleteGovernment Support Muslim MP And Jammiyathu Ulamah
ReplyDeleteyaa Allah Muslim Samukathai Viettrup Pulaikkum Everkal Anaiverukkum
Unathu Thandanai kodupaiya Ameen...ameen yarappal Aalameen
Yaar Oruver Aneeyaya Aachchy Thunai Poahirar
Avar Islathai Veddu Veliyariveddar Al-Hathis Thaparani
==========Kalmunai Mohamed Fowse+++++++++++++++
ஒரு மூன்றாவது அணியின் ( இந்த கழிசடைகள் அல்ல ) அவசியம் இப்போது நமக்கு தேவை.....அவ்வணி சமூக சிந்தனையும் போராட்ட குணமும் , தியாகம் முக்கியமாக கறை படியா இளம் படித்த ,மார்க்க பற்றுள்ளவர்களை கொண்டதாக இருக்க வேண்டும்...
ReplyDeleteஅழகான கடிதம் இருந்தும் என்ன இவர்கள் காதில் விழவா போகின்றது
ReplyDeleteஇவர்களுக்கு பதவி வெறி பிடித்திருக்கறது
மார்க்கத்திற்கே பங்கம் விளைவிக்கும் அரசாங்த்திற்கே
இவர்கள் பங்காளிகள் ச்சே ச்சே என்ன கேவலமான பொழப்பைய்யா
MANJAL SAALVAIKKUM, NAARE THAKKUPEERUKKUM, AAYIRAM KARAM KONDU AATHAVAN ELUNTHU VANTHAAN,PORAALIHALE PURAPPADUNGAL....POONDRA MASTHUKALUKKU MEIMARAKKAATHA ULLATHTHAI THARUWAYAHA ENDRU INTHA NALLA MAATHATHTHIL ELLORUKKUMAHA DHUA KETPOOM.
ReplyDeleteThese wily politicians know how to talk on stage, how to write letters in order to show off, and how to cheat Muslims. They are cowards and opportunists. They are not strong enough to stand up and speak out in the Parliament. They are scared of their seats being snatched and hush-hush dealings made in secret. If they talk, they will get caught and made public and then Muslims will beat them with their slippers.
ReplyDeleteHowever, our Muslims are innocent and those so-called politicians know how to deceive Muslims at the time of election. They will come and start their speech with Bismillah, talk about Quran and Hadith. There will also be some Ulamas on stage. They will also ask Muslims to vote for those wily politicians.
Never vote for those Muslim politicians. Let us teach them a lesson. Vote for new politicians and you can also vote for good Sinhala politicians. These days Sinhala MPs are talking in the Parliament for the Muslims. If our big named politicians lose in election one time, next time they will be more vigilant and do something for our society. Make a strong decision that we will never vote for these opportunist wily politicians.
May Allah give us good and strong leaders for the society!