Header Ads



மடவளையில் மாணவர்கள் கற்கவேண்டிய பாடசாலையில் மாடுகள் கட்டுகிறார்கள் (படங்கள்)


(ஜே.எம்.ஹாபீஸ்)

பத்து இலட்ச ரூபா நிதியைச் சேகரித்துக் கொள்ள முடியாத காரணத்தால் 50 இலட்ச ரூபா செலவு செய்து கட்டிய கட்டிடத்தில் வெளியார் மாடுகளைக் கட்டப் பயன் படுத்து கின்ற ஒரு நிலையைக் காண முடிந்தது.  மேற்படி அதிர்ச்சிச் சம்பவம் வேறு எங்கு மல்ல. புகழ் பூத்த மடவளையில் இடம் பெற்றுள்ளது.

ஒரு காலத்தில் மடவளை மதீனா மத்திய கல்லூரி என்றால் வெளியூர் மாணவர்கள் நிறையப் பேர் வந்து கல்வி கற்ற பாடசாலையாகும். அது உருவாக்கிய உயர் தகைமையாளர்கள் அனேகர் உண்டு. அனால் அண்மைகாலமாக அதில் மந்த போக்கைக் காணமுடிகிறது. வெளியூர் மாணவர்கள் தங்கி கல்வி கற்பது குறைவாக உள்ளது. ஆனால் பழைய நிலைமைகளுக்கும் தற்போதைய நிலைமைக்கும் இடையே பாரிய வித்தியாசம் இல்லை.

இது இப்படி இருக்க மகிந்தோதயத்திட்டத்தின் படி மடவளை மதீனா இரு கூறாக்கப்பட்டு ஒன்று மதீனா என்றும் மற்றது அல்- முனவ்வறா என்றும் பிரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி ஆயிரம் பாடசாலைகள் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் மதீனா மத்திய கல்லூரியும், பத்தாயிரம் ஆரம்பப் பாடசாலைகள் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் அல் முனவ்வரா ஆரம்பப் பாடசாலையும் உள் வாங்கப்பட்டுள்ளன.

இதன்படி கண்டி மாவட்டத்தில் தொழில் நுட்பப் பிரிவைக் கொண்ட ஒரே ஒரு முஸ்லிம் பாடசாலையாக மதீனா அறிமுகமாகியுள்ளது. தொழில் நுட்பப் பிரிவு பற்றி கூறுவதாயின் 2020ம் ஆண்டு இலங்கைப் பல்கலைக்கழகங்களில் இருந்து பி.டெக் பட்டதாரிகள் 5000 பேர் வெளியாக்கப்படவுள்ளனர். பி.ஏ., பி.எஸ்.ஸி., பி.கொம்., பி.இ.டி, பி.வி.சி, போன்று புதிய ஒரு பீடமாக தொழில் நுற்ப பீடம் அறிமுக மாகிறது. அப்படி பல்கலைக்கழக அனுமதி கிடைக்காவிட்டாலும் என்.கியூ. மட்டம் 3 ற்கான சான்றிதழ் வழங்கப் படும். இது மாணவர்களது எதிர்காலத் தொழில் துறையில் பாரிய மாறுதலை ஏற்படுத்தும். அனேகர் இது பற்றித் தெரியாத காரணத்தால் இப்படியான துறைகளை தெரிவு செய்வதில் பின் நிற்கின்றனர். 
இது உலக வங்கியின் வழிகாட்டலில் கட்டாயம் நடத்த வேண்டிய ஒன்றாக உள்ளது.

எனவே 20 சதவீதமான மாணவர்களை பல்கலைக்கழகங்களுக்கு இத்துறையில் உள்வாங்க உயர்கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது. எனவே இது ஒரு வரப்பிரசாதமாகும். இவ்வாறு ஆயிரம் பாடசாலைகள் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் உள்வாங்கும் பாடசாலைகளுக்கு இணையாக  ஆரம்பப் பிரிவுகள் அபிவிருத்தி செய்யப்படுகின்றன.

இதற்கு ஆரம்பப் பாடசாலைகளுக்கான கட்டிடத்தை பெற்றோர்கள் கட்டி கல்வித்திணைக்களத்திற்கு ஒப்படைக்க வேண்டும். இதன்படி 60 இலட்ச ரூபாவில் கட்டத்திட்டமிட் மடவளை மதீனா வின் ஆரம்பப் பிரிவான அல் முனவ்வராவின் 50 இலட்ச ரூபாவிற்கான வேளைகளைப் பூரணப் படுத்திய நிலையில் இன்னும் பத்து இலட்ச ரூபாவிற்கான வேலைகள் பாக்கியாக உள்ளன. இக் காரணத்தால் அக்கட்டிடத்தை பூரணப் படுத்த முடியாமலும், இருபாடசாலைகளின் அபிவிருத்திகளை முன் எடுக்க முடியாத இக்கட்டான நிலையிலும் இருப்பதாகத் தெரிய வந்துள்ளது.

அதே நேரம் கண்டி மாவட்டத்தில் அதி கூடிய மாணவர் தொகையைக் கொண்ட ஆரம்பப் பாடசாலையாகவும் அல் முனவ்வரா உள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் மாணவர்கள் கல்வி பயில வேண்டிய பாடசாலைக் கட்டிடத்தில் மாடு கட்டப்பட்ட நிலையைக் கண்டேன்.

இது தொடர்பாக கட்டிட நிர்மாணக்கமிட்டியிடம் கேட்டபோது மேற்படி விபரங்களைச் சொன்னார்கள். பத்து இலட்ச ரூபாவிற்காண பணியை எதிர்வரும் ஆகஸ்மாதத்திற்கு முன் செய்ய வேண்டியுள்ளதால் கடல் கடந்து வாழும் மடவளை அபிமானிகள் முடியுமாயின் பின்வரும் வங்கிக் கணக்கிற்கு ஏதும் உதவிகளை வழங்கு மாறு வேண்டிக் கொண்டனர்.

நிதி உதவி அனுப்ப வேண்டிய விபரம்.
Primary School Temporary building fund
Bank of Ceylon- Madawaa Bazaar Branch 
A/C NO-  72 315 397

A.H.M.Harris (TP- 0714 87 87 85)
M.T.M.fazly (TP-0777 8 60 50 8)
J.H.A.Rahman (TP-077 6145375)

2 comments:

  1. இந்த ராஜபக்ச அரசாங்கத்தில் மாடுகளுக்கு உள்ள பாதுகாப்பும்,மரியாதயும் மனிதனுக்கு இல்லாயே ! பாவம்

    ReplyDelete
  2. Those are animals, Take pitty on those untill the bulding committee finish the building within the next collection, other wise BBS and Rawaya will collect all those to Police Station to publicity.
    The owners of cattles, cows will hurry now to take care of the cows immediately.
    We can see a little cattle suddenly entered into the hall, why do you blame and create a big nuisance problem to collect money. Is it a good way? You are very lier than BBS
    Think wise?

    ReplyDelete

Powered by Blogger.