வெளிநாடுகளிலிருந்து கணணிகள், கைத்தொலைபேசிகளை இறக்குமதி செய்ய கட்டுப்பாடு
வெளிநாடுகளில் பயன்படுத்தப்பட்ட கணணிகள் மற்றும் கைத்தொலைபேசிகளை இலங்கைக்கு இறக்குமதி செய்யும் போது கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு சுற்றாடல்துறை அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவினால் இலத்திரனியல் பொருட்களை நாட்டுக்கு கொண்டு வருவது தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்கான ஐவர் கொண்ட குழுவொன்று அண்மையில் நியமிக்கப்பட்டுள்ளது.
அந்த குழுவினால் வழங்கப்படும் பரிந்துரைகளுக்கு அமைய எதிர்காலத்தில் கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய சுற்றாடல் அதிகார சபை தலைவர் விமல் ரூபசிங்க தெரிவித்துள்ளார்.
.jpg)
Post a Comment