Header Ads



வியர்வையில் இருந்து குடிநீர் தயாரிக்கும் இயந்திரம்

கடல்நீரில் இருந்து குடிநீர் தயாரிக்கப்படுகிறது. அதேபோன்று வியர்வையில் இருந்து குடிநீர் தயாரிக்கும் வழிவகையும் கண்டறியப்பட்டுள்ளது.

அதற்கான எந்திரத்தை சுவீடனின் ஸ்டாக் ஹோமை சேர்ந்த என்ஜினீயர் ஆன்ட் ரஸ் ஹேம்மர் கண்டுபிடித்துள்ளார்.

இந்த எந்திரம் பில்டர் மற்றும் டிரையருடன் கூடிய அதி நவீன தொழில் நுட்பத்துடன் தயாரிக்கப்பட்டுள்ளது. வியர்வையுடன் கூடிய துணிகளை டிரையரில் போட வேண்டும். பின்னர் எந்திரத்தை இயங்க செய்ய வேண்டும்.

அவை வாஷிங்மெஷின் போன்று வியர்வை துணியை முறுக்கி பிழியும். அதில் இருந்து வெளியாகும் வியர்வையில் அல்ட்ரா வயலட் கதிர்கள் பாய்ச்சப்பட்டு அதி நவீன பில்டர் மூலம் வடிகட்டப்படுகிறது.

இதனால் பாக்டீரியாக்கள் மற்றும் உப்புசத்துகள் அகற்றப்பட்டு குடிநீராக மாறுகிறது.

No comments

Powered by Blogger.