Header Ads



சவூதி அரேபியாவில் உறுப்பு தானம் - 4 பேருக்கு மறுவாழ்வு

(Inne) சவூதி அரேபியாவின் அல் கஸீம் நகரில் மூளைச் சாவு அடைந்த  நோயாளியிடமிருந்து தானம் பெற்ற உறுப்புகளைக் கொண்டு வேறு நான்கு நோயாளிகள் மறுவாழ்வு பெற்றுள்ளனர்.  இந்த நான்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளையும் சவூதி உறுப்பு மாற்று மையம் மேற்பார்வை செய்துள்ளது.

முன்னதாக உறுப்புகளை தானம் செய்தவரின் குடும்பத்தினரிடம்  உறுப்பு தானத்திற்குரிய முறையான அனுமதி பெறப்பட்டு தேவையான பிறருக்கு அறுவை சிகிச்சை மூலம் அவ்வுறுப்புகள் பொருத்தப்பட்டன.

ஏழு, எட்டு வயதுடைய இரு சிறுமிகளுக்கு சிறுநீரகங்கள்  பொருத்தப்பட்டன. முதலாவது சிறுமிக்குஇ ரியாத்திலுள்ள மன்னர் ஃபைஸல்  மருத்துவ ஆய்வு மையத்திலும்இ மற்றவருக்கு  ரியாத், மன்னர் அப்துல் அஸீஸ் மருத்துவ நகரிலும் இந்த அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன

அஃதன்றி,  68 வயதான முதியவர் மற்றும் இரண்டே வயதான குழந்தையொன்று தானமாகப் பெறப்பட்ட கல்லீரல்கள் பொருத்தப்பட்டு மறுவாழ்வு பெற்றுள்ளனர்.  இந்த இரு அறுவை சிகிச்சைகளும் ரியாத்இ மன்னர் ஃபைஸல் மருத்துவ மையத்தில் நிகழ்த்தப்பட்டுள்ளன.

மருத்துவர் ஃபைஸல் ஷாஹீன், சவூதி உறுப்பு மாற்று மையத்தின் பொது மேலாளர்இ விரைவான,  பாதுகாப்பான உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளை மேற்கொண்ட மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.