ஜனாதிபதி முன் அமைச்சர் றிசாத்தை திட்டித்தீர்த்த கிறிஸ்த்த மதகுருமார்
கடந்தவாரம் அலரி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கும், மன்னார் கிறிஸ்த்தவ மதகுருக்களுக்கும் இடையே முக்கிய சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.
இச்சந்திப்பில் பங்கேற்ற கிறிஸ்த்தவ மதகுருமார் மன்னாரில் அமைச்சர் றிசாத் பதியுதீன், முஸ்லிம்களுக்கு மாத்திரமே வேலைவாய்ப்பு வழங்குவதாகவும், புத்தளத்தில் உள்ள முஸ்லிம்களை பலாத்தகாரமாக மன்னாரில் மீள்குடியேற்றுவதாகவும், மன்னாரை முஸ்லிம் மயப்படுத்த அவர் பாடுபடுவதாகவும் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்களை அடுக்கியுள்ளனர்.
அத்துடன் மன்னாரில் இனவிகிதாரசாத்தில் குறைப்பை ஏற்படுத்தும் செயற்றிட்டங்கிளல் அமைச்சர் றிசாத் பதியுதீன் முயல்வதாகவும், இதனால் கிறிஸ்த்தவர்கள் பாதிப்புகளை எதிர்கொள்வதாகவும், முஸ்லிம்களுக்கு மாத்திரமே சலுகைகள் பெற்றுக்கொடுக்கப்படுவதாகவும் கிறிஸ்த்தவ மதகுருமார் குற்றம் சுமத்தியுள்ளனர்.
கிறிஸ்த்தவ மதகுருமாரின் அமைச்சர் றிசாத்திற்கு எதிரான குற்றப்பட்டியலை செவிமடுத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இதுகுறித்து ஆராய்வதற்காக அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்தவை மன்னாருக்கு அனுப்பிவைக்க உத்தரவிட்டதாகவும் ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு கிடைக்கும் தகவல்கள் கிடைக்கின்றன.
Allah is great
ReplyDeleteஅதிகாரப் பலத்தினால் காரியமாற்றுவது தவிர்க்கப்பட வேண்டும். அமைச்சர் றிஷாத் பதியுத்தீன் கட்சிக்காரரான எமதூர் நகர சபைத் தலைவரால் நாங்கள் படும் பாடுகள் தாள முடியவில்லை.
ReplyDeleteசிஷ்யனே இப்படியிருந்தால் குரு எப்படியிருப்பார் எச் சிந்திக்க வேண்டியுள்ளது.
-புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-