Header Ads



சவூதி அரேபியாவில் இலங்கையர்கள் மீது தாக்குதல்

(Sfm) இலங்கையிலிருந்து பணியாளர்களாக சென்ற சிலரை சவுதி அரேபிய காவல்துறையினர் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கந்தார் பாலத்திற்கு அடியில் தங்கியிருந்தவர்களே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளதாகவும், சில இலங்கையர்கள் இதுகுறித்து இலங்கை அதிகாரிகளுக்கு முறையிட்டுள்ளனர்.

சவுதி அரசாங்கத்தின் தற்காலிக பொதுமன்னிப்பு காலம் நிறைவடைவதாக தெரிவித்தே அவர்கள் தாக்குதலுக்கு உள்ளானதாக தெரிவித்துள்ளனர்.

இதுதவிர, வீசா அனுமதி காலம் நிறைவடைந்த நிலையில், மேலும் பல இலங்கையர்கள் ஒலாயா தடுப்பு முகாமிலும், அதேனா பாலத்திற்கு அடியிலும் தங்கியுள்ளனர்.

எனினும், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திடம் இதுகுறித்து முறைப்பாடுகளை தெரிவித்த போதும், தம்மை மீட்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.

இருந்தபோதும், இலங்கையர்கள் உள்ளிட்ட சவுதியில் வீசா அனுமதி காலம் நிறைவடைந்த நிலையில் தங்கியுள்ள வெளிநாட்டு பணியாளர்களுக்கு, சவுதி அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட பொது மன்னிப்பு காலம் நவம்பர் 4ஆம் திகதிவரையில் நீடிக்கப்பட்டுள்ளது. 

No comments

Powered by Blogger.