முஸ்லிம் காங்கிரஸுக்கு அரசாங்கம் அழைப்பு
செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாணசபை தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனி தனது பங்காளிக் கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு அழைப்பு விடுத்துள்ளது. குறிப்பிட்ட கலந்துரையாடலுக்கு ஐ.மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான சுசில் பிரேம் ஜயந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீமுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ரி.ஹசன் அலி கருத்துத் தெரிவிக்கையில்,
‘அரசாங்கம் எமக்களித்த வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்றாத நிலையில், அரசின் அனைத்துக் கோரிக்கைகளுக்கும் தலைசாய்க்க முடியாது. அழைப்பினை ஜனநாயகப் பணிப்புடன் ஏற்று சந்திப்பில் கலந்து கொள்ளவுள்ளோம். ஆனால், கட்சி உறுதியாக நிலைப்பாட்டிலே இருக்கிறது. சந்திப்பின்போது தெரிவிக்கப்படும் கருத்துகள் பற்றி ஆராய்வோம். அடுத்த வாரம் முதற்பகுதியில் இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளது என்றார். Vi
.jpg)
Post a Comment