மஹியங்களை பள்ளிவாசல் தாக்குதல் - ஹிஸ்புல்லா கோட்டாபய ராஜபக்சவுக்கு அவசர கடிதம்
(பழுலுல்லாஹ் பர்ஹான்)
மஹியங்கனைப்பள்ளிவாசல் மீது தீவிரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்கதலுக்கு பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தனது கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளதோடு இது தொடர்பான அவசர கடிதம் ஒன்றையும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு அனுப்பிவைத்துள்ளார்.
கடந்த 20 வருடங்களுக்க மேலாக மஹியங்கனை அரபாப் பள்ளிவாசல் இயங்கிவருகிறது. மேலும் 5நேரத் தொழுகையும் மிக அமைதியாக யாருக்கும் இடையூறு இல்லாத வகையிலும் இடம்பெற்று வருகிறது.
அப்படிப்பட்ட அப்பள்ளிவாயலையும் அதனுடன் சம்பந்தப்பட்டவர்களையும் இப் புனிதமான றமழான் மாதத்தில் தாக்கியதோடு மட்டுமல்லாது இஸ்லாத்தில் அறுவறுக்கப்பட்ட பன்றியின் இரத்தமும் சிந்தச் செய்யப்பட்டுள்ளமையினையும் பிரதியமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இனங்களுக்கிடையில் முறுகளை ஏற்படுத்தி மீண்டும் நாட்டில் ஒரு இன முறுகளை ஏற்படுத்தும் இந்த சக்திகள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு சட்ட நடவடிக்கையினை பெற்றுக் கொடுக்க வேண்டுமென பாதுகாப்பமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்சவுக்கு அவசர கடிதம் ஒன்றையும் பிரதியமைச்சர் நேற்று அனுப்பிவைத்துள்ளார்.
தொடராக இவ்வாறான தாக்குதல் இடம்பெறும் வேளையில் இராணுவத்தினரோ பொலிசாரோ எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது கடும் கவலையளிப்பதாக தெரிவித்த பிரதியமைச்சர் இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சின் கவனத்திற்கு பல முறை தகவல் வழங்கிய போதும் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை எனவும் பிரதியமைச்சர் தனது கவலையினை தெரிவித்தார்.
மேலும் இந் நாசகார சக்திகள் கைது செய்யப்படாமையால் இவ்வாறான தாக்குதல்கள் தொடர்வதாகவும் உடனடியாக இவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என குறிப்பிட்ட அமைச்சர் இனிமேலும் காவலத்துறையினர் கண்மூடித்தனமாக இருக்க வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார்.
.jpg)
அவங்கதான் இதை காசு கொடுத்து செய்யும்போது அதை யாரும் கேட்கமுடியுமா என்ன? பொலிஸ் மற்றும் ஏனைய அரச் படைகளும் அவர்களுக்கு முன்னால் அவர்கள் சொல்வதைக்கேட்டு பொட்டிப்பாம்பாய அடங்கி ஒடுங்கி பயந்துபோய் கிடக்கும்போது எப்படி வாய்திறந்து பேசமுடியும்...
ReplyDeleteஎன்ன படமா? இயலுமென்றால் கடிதத்தின் ஒரு கொப்பியை பிரசுரிங்கள் பார்ப்போம். பொய்தானே! என்ன சார் இந்த டைம் பார்த்து விலயார்றீங்க ?
ReplyDeleteஇந்தக்கடிதங்கள் எல்லாம் உரிய இடங்களுக்குப்போய் சேர்ந்து உரிய வேலை செய்யுமோ இல்லையோ உங்களைப்போன்றவர்களையெல்லாம் முஸ்லிம்கள் தலைவர்களாக தேர்ந்தெடுத்தார்களே அவர்களுக்கு நீங்கள் மறுமையில் வகைசொல்லும்வரை உங்களை இறவன் நகரவிடவே மாட்டான்.
ReplyDeleteஎதுவும் நடக்காது மக்களை ஏமாத்தும் முயற்ச்சியே இது. இதுவரையும் நீங்கள் எடுத்த முயட்சிகள் எதுவுமே பலிக்கவில்லையே
ReplyDeleteDont fool the Muslim community If are you Muslim if you have belive in your heart through your Minister Post and go home rahter do double face.
ReplyDeleteபுறாவின் பூலம் தூது அனுப்பி இருக்கலாமே? இவர் எந்தக் காலத்தில் இருக்கிறார்?
ReplyDeleteகட்சி மற்றும் பதவி விடயங்களுக்கு அவசரக் கூட்டம் மற்றும் சந்திப்புக்களை மேற்கொள்ளும் இந்த சுயநலவாதிகள், சமுதாயம் தொடர்பான விடயங்களில் மக்களை ஏமாற்றும் விதமாக செயற்படும் இது போன்ற முதுகெலும்பில்லாத அரசியல் வாதிகளுக்கு மக்கள் எதிர்வரும் தேர்தலில் நல்ல பதில் கொடுக்க வேண்டும்