காத்தான்குடியில் மஸ்ஜிதுல் முஸ்லிஹீன் பள்ளிவாயல் திறப்பு (படங்கள்)
(பழுலுல்லாஹ் பர்ஹான்)
மட்டக்களப்பு-காத்தான்குடி பௌஷி மாவத்தையில் தனவந்தர் நூர்முகம்மட் ஹாஜியார் என்பவறின் சுமார் 80 இலட்சம் ரூபா நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட மஸ்ஜிதுல் முஸ்லிஹீன் எனப்படும் பள்ளிவாயலொன்று 19-07-2013 நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை திறந்து வைக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின்,தலைவரும் பொருளாதார அபிவிரத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பிரதம அதிதியாக் கலந்து கொண்டு இந்த புதிய பள்ளிவாயலை திறந்து வைத்தார். உலமாக்கள் ஊர் பிரமுகர்கள் புத்திஜீவிகள் என பலரும் பிரசன்னமாயிருந்தனர்.
புதிய பள்ளிவாயல் திறப்பு விழாவை தொடர்ந்து அப்பள்ளிவாயலில் விஷேட இப்தார் நிகழ்வும் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.



நேற்று 19.07.2013 வெள்ளிக்கிழமை மஹியங்கனையில் 21 வருடங்களாக இருந்து வந்த ஒரேயொரு ஜும்ஆப்பள்ளிவாசலும் மூடப்பட்டபோது 60க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களும், பத்துக்கும் மேற்பட்ட ஜும்ஆப்பள்ளிகளும் இருக்கின்ற காத்தான்குடியில் மேலும் ஒரு பள்ளிவாசல் திறந்து வைக்கப்பட்டுள்ளது வரலாற்றுச் சிறப்பாகும்.
ReplyDeleteஊவா மாகாண அமைச்சர் அநுர விதானகேயினால் மஹியங்கனை அறபா ஜும்ஆ மஸ்ஜித் எப்போது மூடப்பட்டது என எதிர்கால சந்ததிகளிடம் கேள்வி வரும்போது அவர்கள் காத்தான்குடியில் தேசிய ரீதியான பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு திறந்து வைக்கப்பட்ட இந்தப் பள்ளிவாசலை நினைவு படுத்தி சரியாக விடையளிக்கலாம்.
-புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-