'பொத்துவில் ஆதார வைத்தியசாலை அத்தியட்சகர் டாக்டர் இஸ்ஸதீனின் விளக்கம்'
பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் பரிதாபமாக கர்ப்பிணித்தாய் சேய் மரணித்ததாக எமது இணையத்தில் அண்மையில் செய்தியொன்று வெளியாகியிருந்தது. இதுகுறித்து. இதுகுறித்து பொத்துவில் ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஏ.எம்.எம் இஸ்ஸதீன் வழங்கியுள்ள விளக்கம்
பொத்துவில்-6,சேர்ந்த ஐ.எல்.ஜெஸீமா,வயது-39 எனும் கர்ப்பிணித்தாய் தனது 2வது பிரசவத்திற்காக பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின் மகப்பேற்று நிபுணரின் மேலதிக சிகிச்சைக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு; 15.07.2013, மாலை 6.50 மணிக்கு ஆரோக்கியமான நிலையிலேயே (கணவரின் முன்னிலையில்); அம்பியுலன்ஸ் வண்டி மூலம் மாற்றப்பட்டார்.
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் சாதாரண பிரசவத்திற்காக ஆரம்ப கட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட பின் தாயின் உடல் நிலை மோசமாக இருந்ததினால் அன்று நள்ளிரவு குறித்த கர்ப்பிணித்தாய்க்கு மகப்பேற்று நிபுணரினால் அறுவைச்சிகிச்சை மூலம் சிசு பிறப்பிக்கப்பட்டது இதன்போது கர்ப்பப்பையில் வெடிப்பினால் இரத்தப்போக்கு அவதானிக்கப்பட்டதால் கர்ப்பப்பையும், அகற்றப்பட்டு அறுவைச்சிகிச்சையை வெற்றிகரமாக முடிந்து தாய்க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலதிக அதிதீவிர சிகிச்சைக்காக அம்பாறை பொது வைத்தியசாலைக்கும் குறித்த கர்ப்பிணித்தாய் மாற்றப்பட்டார். அங்கு அதிதீவிர சிகிச்சை பலனளிக்காத நிலையில் 16.07.2013, அதிகாலை குறித்த கர்ப்பிணித்தாய் பரிதாப நிலையில் மரணமடைந்துள்ளார்.
பொத்துவில் ஆதார வைத்தியசாலை 2007ம் ஆண்டு ஆதார வைத்தியசாலையாக தரமுயர்த்தப்பட்டீருந்தும் போதியளவு வசதிகளும், வைத்திய நிபுணர்களும் இதுவரை ஏற்படுத்தப்படாமல் இருப்பது பொத்துவில் வாழ் ஏழை மக்களின் துரதிஷ்டமாக இருந்தாலும் தற்போது வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஏ.எம்.எம் இஸ்ஸதீன் தலைமையில் வைத்தியசாலை அபிவிருத்தி குழுவின் ஒத்துழைப்புடன் முடியுமான வரையில் மக்களுக்கு சேவை வழங்கப்பட்டு படிப்படியாக முன்னேறிவரும் இக்காலகட்டத்தில் இவ்வைத்தியசாலை பற்றி வதந்திகளை பரப்புவது இவ்வைத்தியசாலை முன்னேற்றத்துக்கு தடையான ஒரு செயற்பாடாகும்.
தற்போது நிரந்தரமாக ஒரு பொது வைத்திய நிபுணர் நியமிக்கப்பட்டுள்ளமையும் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் மகப்பேற்று நிபுணர், சிறுபிள்ளை வைத்திய நிபுணர் மற்றும் அறுவைச்சிக்சை நிபுணரின் சேவைகள் மாதத்திற்கு இருமுறை வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இவ்வைத்தியசாலையில் அறுவைச்சிக்சைகளை மேற்கொள்ள இரத்த வங்கியும், மயக்க மருந்து வழங்கும் வைத்தியரும் இல்லாமை மிக முக்கிய குறைபாடாக காணப்படுகிறது. மகப்பேற்று நிபுணரின் துள்ளியமான சேவைக்கு வேண்டிய ஸ்கேனிங் இயந்திரம் ஒன்று இங்கு இல்லாமல் இருப்பதும், பொது வைத்திய நிபுணரின் சிறந்ந சேவைக்கு போதுமான ஆய்வுகூட வசதிகள் இன்னும் ஏற்படுத்தப்படாமலும் இருப்பது கவலைக்குறிய விடயமாகும்.
ஆளனிப்பற்றாக்குறையை நீக்க கிழக்கு மாகாண சபையும் எந்த அரசியல் சாணக்கியர்களும் இதுவரை முயற்சித்ததாக தெரியவில்லை. இந்நிலையில் முடியுமான வரையில் அன்றாட சேவையை சீராக வழங்க நிருவாகம் முகங்கொடுக்கும் சவால்களை பொதுமக்களும் பொருப்புள்ளவர்களும் புரிந்து, வைத்தியசாலையின் தலைமைக்கும், வைத்தியசாலை அபிவிருத்தி குழுவுக்கும் ஒத்துழைப்பை வழங்கி எதிர்கால வைத்தியசாலை அபிவிருத்திக்காக ஒன்றுபடுவதே சிறந்ததாகும்.
அபிவிருத்தி நோக்கை சீர்குலைப்பதை கைவிட்டு சுயநல போக்கு சிந்தனைகளின் ஆளுகைக்குள்ளிருந்து விடுபடுதலும் பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் எதிர்கால அபிவிருத்தி பற்றிய ஒன்றுபட்ட ஆக்கபபுர்வமான சிந்தனைகளுக்கும், செயற்பாடுகளுக்கும் வழிவகுக்கப்படுவதுமே இன்றைய காலத்தின் இவ்வைத்தியசாலையின் தேவையாகும்.

என்ன இவர் வைத்தியசாலை குறை மட்டும் தான் விலக்கி உள்ளார் ஏன் அந்த பெண்மணி மரணித்தார் என்பதை விளக்கவில்லை.அந்த வைத்தியசாலையில் போதிய வசதியில்லை என்றால் உடனே பக்கத்தில் உள்ள வைத்தியசாலைக்கு மாற்ற இருந்திச்சி அல்லவா.
ReplyDeleteஉரிய வைத்தியர்கள் தாதிமார் பரிசொதனைக்கூடம் மற்றும் இரத்த வங்கி போன்றவை இல்லையென்றால் உடனடி கவனிப்புக்குரிய நோயாளர்களை வேறு இடங்களுக்கு அவசர அவசரமாக மாற்றினால் உயிரிழப்புகளில் இருந்து தவிர்ந்து கொள்ளலாமே, இச்சம்பவத்தில் மரணித்த தாயும் தன்னை அக்கரைப்பற்று ஆ.வை சாலைக்கு மாற்றும்படி மண்றாடியும் ஏன் அன்றிரவே அனுப்பி வைக்கவில்லை.
ReplyDeletedear editor don't post baseless news
ReplyDeleteயாரைக் குறை சொல்வது மகப்பேற்று மருத்துவர் இல்லாத வைத்தியசாலையில் கடைசி நேரத்தில் சிகிச்சைக்காக செல்வது யாருடைய தவறு . இந்த மரணத்தில் பிழை காண்பவர்கள் உண்மையான பற்றுள்ளவர்கள்தானா . மனதை தொடடுச் சொல்லுங்கள் . மரணம் நிகழ்ந்தது எங்கே பிழை காண்பது எங்கே .
ReplyDeleteImam Ahamed:>Don´t blame news editor they just news given what they saying this incidents of doctor.
ReplyDeletemr.sindu bindu, please try to understand the actual situation & please refer again what did say dr.issadeen's statement. otherwise don't try to publish your comment.
ReplyDeleteஊர் பிறந்த வைத்தியர்கள் ஊர் பிறந்த தாதியர்,மற்றும் ஊழியர்கள் ஊர் மக்களுக்கு தானே சேவை செய்கிறோம் என்ற மன நிலை உருவாக வேண்டும் ...உண்மையை சொன்னால் தங்கள் பிரத்தியேக கடமையின்போது காட்டும் அக்கறையின் 10வீதம் மாற்றம் ஏற்படின் அதன் விளைவு பன்மடங்கு பலனை கொடுக்கும் ...அவ்வூரின் வேறு நிறுவனம் ஒன்றில் வேலை செய்ததன் அனுபவம் ....
ReplyDeleteவிடுங்கப்பா... வெள்ளம் வரும் முன்னே அணையக் கட்டியிருக்கணும். இந்த இடத்தில் விளக்கம் கேட்டா. சொல்லால் அடிக்கிறீங்க... உரிய இடத்தில் விளக்கம் கேட்டா அப்புறம் எங்க வம்சமே வெள்ளத்தில அடிபடும். செய்யும் தொழிலே தெய்வம் எனும் எண்ணம் எல்லோர் மனதிலும் உதிக்கும் வரை அமுக்கித்தான் வாசிக்கணும்...
ReplyDeleteயார் என்னசொன்னாலும் பிழை பொத்துவில் வைத்தியசாலையில் இல்லை வைத்தியர்களின் வறட்டுப்புத்தியாலும் வறட்டுக்கெளரவத்தாலும் பறவாயில்லாத தனத்தாலும் அத்துடன் இன்னும் சில சுயனல சுய தேவைகளை நிறைவேற்றவேண்டுமென்ற எண்ணத்தினாலும் தான் இவைகள் நடக்கின்றன என்றும் பொத்துவிலைச்சேர்ந்த பலரிடம் விசாரித்ததில் கிடைக்கப்பெற்ற தகவல். ஆகவே நாம் ஆவேசப்படுவதெல்லாம் இனிமேலும் இதுபோன்ற உயிர்ப்பலிகள் ஆகிவிடக்கூடாது மக்களுக்காக அரசாங்கம் கட்டி இலவசமாக அனைத்துச்சேவைகளையும் திறந்துள்ள நிலையில் வைத்தியர்களின் பிடிவாதங்களுக்காகவும் அவர்களின் விருப்பங்கள் நிறைவேறவேண்டுமென்பதற்காகவும் ஏழைகளின் உயிர்களில் விழையாடுவது ஒரு போதும் அனுமதிக்கக்கூடிய விடயமல்ல இதுபோன்ற சம்பவங்களை நடக்காமல் பார்த்துக்கொள்ளவேண்டுமென்பதுதான் எமது வேண்டுகோள்.
ReplyDeleteamam namathu ooliyarkalin podupokkum irukkinrathu penkal evvalavu vethanail irunthalum avarkalukku kavalai illai avarkalukku
ReplyDeleteiravuneragkalil thookkam than mukkiyam.ithu naan kanda anupavum. muthalil mootha ooliyarkalai idamaattam seythu puthiyavarkalai anumathikka vendum ithai poruppaliyaka ulla vaittiyarthan kavanam edukkvendum . aanaalithan pothum ippadi thavarukal seyya vendam.