கல்முனை அஷ்ரப் வைத்தியசாலையில் சமூக ஒற்றுமையை வலியுறுத்தும் இப்தார்
(எஸ்.அஷ்ரப்கான்)
கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை ஏற்பாட்டில் இன்று (19) ஐக்கிய சமூக ஒற்றுமையை வலியுறுத்தும் இப்தார் நிகழ்வு சற்று முன்னர் வைத்தியசாலையில் வைத்திய அத்தியேட்சகர் ஏ.எல்.எம். நஸீர் தலைமையில் இடம்பெற்றது.
இந்த இப்தார் நிகழ்வில் மூவின மக்களையும் பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் சர்வமத தலைவர்களான கல்முனை சுபத்திரா ராம விகாரையின் விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரர், மௌலவி முஹம்மட் முஸ்தபா மற்றும் முன்னாள் கார்மல் பற்றிமா கல்லுாரியின் அதிபர் பிரதர் மத்தியூ மற்றும் கல்முனை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி இளங்ககோன் மற்றும் வைத்தியசாலையின் வைத்தியர்களான வை.எல்.எம். யூசுப், ஏ.எல்.எம். பாறுாக், எம். மாஹீர், உட்பட வைத்தியசாலையின் உத்தியோகத்தர்கள் ஊழியர்களும் பிரதேச வர்த்தகர்கள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.
இந்த இப்தார் நிகழ்வில் விசேட உரை ஒன்றை நிகழ்த்திய மௌலவி முஸ்தபா, அவர்கள் பல்லின மக்கள் வாழும் இலங்கைத்திருநாட்டில் மூவினங்களும் அவரவர் மத அனுஸ்டானங்களை சிறப்பாக செய்வதற்கான விட்டுக்கொடுப்புக்களை சகோதர மதத்தவர்கள் செய்ய முன்வரவேண்டும். அத்துடன் எல்லா மதங்களும் ஐக்கியம் சகோதரத்துவம், சமாதானத்தையே வலியுறுத்துவதாகவும் கூறினார்.



Ifthar is only for saaims. Now our people perform it to show their Munafikism to other communities.
ReplyDeleteAllah knows everything inside.