முர்ஸி அகற்றம் - இராணுவத்தினரால் தற்காலிக ஜனாதிபதியாக நீதிபதி அட்லி மன்சூர் நியமனம் (வீடியோ)
கெய்ரோ - எகிப்தில் நடைபெற்ற ஜனாதிபதி முர்ஸியின் ஆட்சி கலைக்கப்பட்டுள்ளது. புதிய அதிபரை நியமிப்பதற்கு எகிப்து ராணுவம் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.
03.07.13) இரவு 7 (எகிப்து நேரம்) மணிக்கு முர்ஸியை அதிபர் பதவியிலிருந்து நீக்கி விட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது.
முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பினைச் சார்ந்த தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. அதிபர் முர்ஸி மற்றும் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் தலைவர் முஹம்மத் பதீ ஆகியோர் நாட்டை விட்டு வெளியேறவும் ராணுவம் தடை விதித்துள்ளது. கெய்ரோவை ராணுவம் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.
எதிர்க்கட்சிகளுடன் இணைந்துக் கூட்டணி ஆட்சி அமைக்க முர்ஸி சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனைப் பற்றி ராணுவம் கருத்து எதனையும் இதுவரை தெரிவிக்கவி்ல்லை. எதிர்க்கட்சித் தலைவர் முஹம்மத் எல் பராதி, அல் அஸ்ஹர் தலைமை மதகுரு ஷேக் அஹமத் அல் தாயிப் மற்றும் கிறிஸ்தவ மதகுரு தவாட்ரோஸ் II ஆகியோருடன் ராணுவத் தலைமை அதிகாரி அல் ஸிஸ்ஸி எதிர்கால நடவடிக்கைகள் குறி்த்து கலந்துப் பேசியுள்ளார். இந்தக் கூட்டத்தில் ஸலபி அமைப்பினைச் சார்ந்தவர்களும், போராட்டத்தினை நடத்தி வரும் இளைஞர் இயக்கத்தினைச் சார்ந்தவர்களும் கலந்துக் கொண்டுள்ளனர். இறுதியாக கிடைத்த தகவலின்படி தலைமை நீதிபதி அட்லி மன்சூர் எகிப்தின் தற்காலிக அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.

bad move
ReplyDeleteஎகிப்தில் இஸ்லாமிய அரசு காபிர்களினதும் அவர்களது கை பொம்மைகளினதும் சதிஇனால் கவிள்கப்பட்டுள்ளது. உண்மையான இஸ்லாத்துக்கு இஹவங்களைத் தவிர வேறு எந்த எஹிப்தியர்களும் ஆதரவளிக்க மாட்டார்கள் போல. அமெரிக்கா, இஸ்ரேல் ஈரான் இவட்டைஎல்லாம் விட சவுதி தனது நிலைப்பாட்டை தெட்டத் தெளிவாக சொல்லியுள்ளது நாங்கள் முஸ்லிம்களல்ல எங்களுக்கு இஸ்லாம் ஒரு விளையாட்டுப் பொருள் மாத்திரமே அதனை ஒளிப்பவர்களுடன் நாங்களும் முன்னணியில் நிற்போம். இவ்வுலகில் இஸ்லாம் வேறு எல்லா மதத்தையும் விட உயர விடமாட்டோம். அமெரிக்காவும் இஸ்ரேலும் ஐரோப்பிய நாடுகளும் தான் எமது வழிகாட்டிகள் அவர்கள் என்ன சொன்னாலும் உடனே செய்வோம் மாறாக இஸ்லாம் என்றால் நாங்கள் சொல்வது தான் சரி வேறு எந்த அறிகர்கள் என்ன சொன்னாலும் அவர்களை ஒழித்துக் கட்டும் பணியில் காபிர்களுடன் இணைந்து செயற்படுவோம் என்பதை
ReplyDelete