Header Ads



''எச்சரிக்கை'' - பஸ்களில் பெண்களின் அந்தரங்க உறுப்புகள் படம்பிடிப்பு..!

(JM.Hafeez)

கண்டி மஹியங்களை பஸ்ஸில் பயணித்த பெண் ஒருவரது அந்தரங்க அவயவங்களை  தனது கையடக்க தொலைபேசி மூலம் படம் பிடித்ததாகக் கூறப்படும்  இனைஞர் ஒருவரை கண்டி பொலீஸார் (2013  07 02)  கைது செய்துள்ளனர்.

இது பற்றித் தெரிய வருவதாவது,

கண்டி - மஹியங்கனை பஸ் வண்டியில் பயணித்த குறித்த பெண்ணின் கால்களுக்கு கீழே கையடக்க தொலை பேசியை இரகசியமாக வைத்து இவ்  இளைஞன் இப் பெண்ணின் அந்தரங்க உறுப்புக்களைப்  படம் பிடித்துள்ளதாக பொலீஸாருக்கு அப்பெண் தெரிவித்ததை அடுத்து சந்தேக நபர் கைதாகியுள்ளார். 

பொலீஸார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணைகள் மூலம் அது தெரிய வந்துள்ளதாகவும் கண்டிப் பொலீஸார் தெரிவித்தனர்.

இது சம்பந்தமாக குறித்த பெண் 119 பொலிஸ் அவசர பிரிவிற்கு அறிவித்தன் பின் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலீஸார் மேலதிக விசாரணைகளை நடாத்துகின்றனர்.

1 comment:

  1. பெண்கள் முழு உடலையும் மறைத்து ஆடை அணிந்தால் எந்த பிரச்சினையும் ஏற்படாது.பெண்கள் தமது ஆடையை சீரமைக்கும் வரை இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காது.சட்டத்தை மாத்திரம் பிரயோகித்து இதை கட்டுப்படுத்த முடியாது.இதனால் தான் இஸ்லாம் சட்டதை பிரயயோகிக்க முன் இஸ்லாமிய சூழலை உருவாக்குமாரு போதிக்கிறது.இஸ்லாம் எங்கு இருக்குமோ அங்கு அமைதி நிலவும்.யா அல்லாஹ் முஸ்லிம் பெண்களையும் முழு முஸ்லிம் சமூகத்தையும் காப்பாயாக!

    ReplyDelete

Powered by Blogger.