Header Ads



மஹியங்கனை பள்ளிவாசலை முற்றாக அகற்றுவதற்கு சூழ்ச்சி..?

(பதுளையிலிருந்து மொஹமட் பாயிஸ்)

மகியங்கனையில் உள்ள மஸ்ஜிதுல் அரபா பள்ளிவாசல் இன்றுவரை மீண்டும் திறக்கப்படவில்லை. பள்ளிவாசல் அமைந்துள்ள கட்டிடத்தை முற்றாக அங்கிருந்து அகற்றுவதற்கான சூழ்ச்சிகள் இடம் பெற்று வருவதாக செய்திகள் கசிகின்றன. 

பள்ளிவாசலுக்குரிய கட்டிடம் சுமார் 40 வருடங்களுக்கு முன் சீனி முஹம்மது அவர்களால் வாங்கப்பட்டது. அன்றைய வீடமைப்பு அதிகார சபை மூலம் குறித்த கட்டிட தொகுதி விற்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதற்கான அனுமதி பத்திரங்களே உள்ளது. இருப்பினும் 40 வருடங்கள் கழிந்தும் உறுதி பத்திரங்கள் வழங்கப்படவில்லை. இந்நிலையில் குறித்த கட்டிட தொகுதியை வாங்கிய முதல் உரிமையாளர் மீண்டும் அக்கட்டிட தொகுதியை வாங்குவதாக செய்திகள் தெரிவிக்கப்படுகின்றன. 

இந்நிலையில் அங்குள்ள முஸ்லிம்களுக்கு தமது அன்றாட கடமைகளை நிறைவேற்ற முடியாமல் போக கூடிய சூழ்நிலை ஏற்படும். அதே போன்று நாட்டில் ஏனைய பகுதிகளில் இவ்வாறு உறுதியற்ற நிலையில் உள்ள மசூதிகளும் இவ்வாறு பரிபோகக்கூடிய நிலை எதிர்காலத்தில் உருவாகலாம். இதுவரையும் பள்ளிவாசலை மீண்டும் திறப்பதற்கான அறிகுறிகள் அதிகார பகுதியிலிருந்து வரவில்லை. பள்ளிவாயில் மூடியிருப்பதையும் இரண்டாம் திகதி இடம்பெறவுள்ள பொதுபலசேனா கூட்டத்திற்கான போஸ்டர்களையும் வீதிகளில் ஆங்காங்கே தொங்கவிடப்பட்டிருப்பதையும் காணலாம்.

4 comments:

  1. 40 வருடங்களுக்கு முன்னர் முதலாம் உரிமையாளரிடம் இருந்து பணம் கொடுத்து அக்கட்டிடத்தை வாங்கிய சீனி முகம்மது ஹாஜியார் அவர்கள், இந்த நீண்ட காலப் பகுதியில் அதற்கான உறுதியைப் பெற்றுக் கொள்வதில் கவனஞ் செலுத்தாமல் இருந்ததன் விளைவு இன்று சட்ட ரீதியாக உரிமை கோரப்பட முடியாத நிலையைத் தோற்றுவித்துள்ளது.

    இத்தனைக்கும் அவர் பிறந்த மண்ணிலும், வர்த்தகத்திற்காகச் சென்று வாழ்ந்த மஹியங்கனைப் பிரதேசத்திலும் அரசியல் செல்வாக்குடன் இருந்தவர்.

    அவர் முயற்சித்திருந்தால் இந்த பொது பல சோனாக்கள் பிறப்பதற்கு முன்னர் எப்போதோ அவரது கட்டிடத்திற்கான உறுதியை அரசியல் செல்வாக்கைப் பிரயோகித்துப் பெற்றுக் கொண்டிருக்க முடியும்.

    சீனி முகம்மது ஹாஜியார் போன்றவர்களால் மிகுந்த அர்ப்பணிப்புடன் வளர்க்கப்பட்ட எமது மண்ணின் மைந்தன் ஹிஸ்புல்லா, இன்று இலங்கை அரசாங்கத்தின் உச்சஸ்தாய அரசியல் அதிகாரத்தில் இருந்து கொண்டிருக்கின்றார்.

    அவரிடம் இதுபற்றிச் சொலிலியிருந்தால் எப்போதோ அவர் உறுதியைப் பெறுவதற்குரிய நடவடிக்கைகளை எடுத்திருப்பார். இன்று அவருக்கு தொலைபேசியில் சீனி முகம்மது ஹாஜியாருடன் கதைப்பதற்கும் நேரம் இல்லாத மனிதராக உள்ளார்.

    அதேபோல் மஹியங்கனைப் பகுதியிலும், ஊவா மாகாணத்திலும் பல அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் அவரது நன்மதிப்புக்குரியவர்களாக இருந்துள்ளனர். என்றாலும் இப்படியொரு எதிர்மறையான நிலைமை இந்த நாட்டில் ஏற்படும் என எந்தவொரு முஸ்லிமுமே நினைத்தும் பார்த்திருக்கவில்லை.

    இந்த மஹியங்கனைச் சம்பவம் இலங்கை முழுவதிலும் இறையில்லங்களையும், மத்ரஸா போன்ற நிறுவனங்களையும் பராமரிக்கின்ற நிர்வாகிகளுக்கு ஒரு படிப்பினையாக அமைய வேண்டும். பெயரளவில் நிர்வாகிகள் என இருந்து கொண்டிருக்கக்கூடாது. வக்புச் சொத்துக்களை உறுதிப்படுத்திக் கொள்வதற்கான நடவடிக்கைகளை இனியாவது விழிப்புடனும், பொறுப்புடனும் மேற்கொள்ள வேண்டும்.

    -புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-

    ReplyDelete
  2. intha palliyil tholukai nadaththa koodaazu enru achchuruththal
    vidukkappatrirukkirazu enra ariviththalukku pathilaga "THAVIRKA
    MUDIYATHA KAARANATHTHAAL" enru poaliththanamaaga moodi
    maraippathanaal enna shazikkalaam enru ninaikkiraargal?
    Muslimgal muzalil awarkalin ottumoththa cheyatpaadukalayum
    cheerthookip paarkkum neram kaluththukkumel vanthum,ezuvume
    nadakkazazupoal irundhuvittu,enna palanai ezir paarkkiraargal?
    Oru choththai vaangumpoazu uriya aavanangalai petrukkolla vendamaa?
    Vanakkasthalangalai nirmaanikkumpoazu azatkuriya olungu vizigalai
    kadaippidikka vendama?Chattaththinmun chella mudiyumaa mudiyaazaa?
    Emanthu nitkinreergalaa? Eyn?Ezatkaaga appadi?

    ReplyDelete
  3. பாருங்கோ...மஹியங்கணை பள்ளி வாசல் மூடப்பட்டு இன்றுடன் மூன்று நாள் ஆகின்றது இதுவரைக்கும் ஓரு முஸ்லிம் அமைச்சரோ ,பாராளுமன்ற உறுப்பினரோ நேரடியாக போய் என்னவென்று கூட பார்க்க வில்லையே இவனுகள் என்னசாதி மனிசனுகள். கப்றுக்குள்ள கொன்டு போய்வச்சி கப்று மூடப்பட்டத்துக்கு பிறகுதான் தெரியும்.

    ReplyDelete
  4. அல்லாஹ்வின் சாபக்கேடு மிக விரைவில் காபிர்களை வந்தடையும் சமூகமே முஸ்லீம்களை சீண்டிபாக்காதே ! வெற்றி எமக்கே

    ReplyDelete

Powered by Blogger.