Header Ads



கட்டார் நாட்டு புதிய அரச தலைவருக்கு ஜனாதிபதி மஹிந்த வாழ்த்து

கட்டார் நாட்டில்  அண்மையில் அதிகாரத்துக்கு வந்த அரச தலைவர்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது பாராட்டு செய்திகளை அனுப்பி வைத்துள்ளார்.

கட்டார் இராச்சியத்தில் புதிய எமிராக அதிகாரம் மாற்றப்பட்டுள்ள ஷேக் டாமின் பின் ஹமாட் அல் - தானி அவர்களுக்கும் ஜனாதிபதி அவர்கள் வாழ்த்துச் செய்தியினை அனுப்பி வைத்துள்ளார். அதில் பல ஆண்டுகளாக இலங்கையும் கட்டார் இராஜ்ஜியமும் நட்புறவை பேணிவந்துள்ளன.

உங்கள் அன்புத் தந்தையாரும் எனது நெருங்கிய நண்பருமான கட்டார் இராஜ்ஜியத்தின் முன்னாள் எமிர் 2012 ஜனவரியில் இலங்கைக்கு மேற்கொண்ட விஜயமும் 2012 மே மாதத்தில் கட்டார் இராஜ்ஜியத்திற்கு நான் மேற்கொண்ட விஜயமும் எமது உறவுகளை மேலும் பலப்படுத்தியுள்ளன எனவும் ஜனாதிபதி தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. damin alla sheikh Tamim enpathai azhakana tamilil elutha mudiyume

    ReplyDelete

Powered by Blogger.