´மக்களுக்குப் பணி செய்வதற்காகவே அரசாங்கத்துடன் இணைந்திருக்கின்றோம்'
அரசாங்கத்துடன் சில புரிந்துணர்வை வைத்துள்ள தமது கட்சி எல்லா தேர்தல்களிலும் அரசாங்கத்துடன் இணைந்துதான் போட்டியிட வேண்டும் என்று ஒப்பந்தம் எதனையும் செய்து கொள்ளவில்லை.
ஆகவே தான் வடக்கில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிடுவதாக அந்தச் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.ரீ.ஹஸன் அலி தெரிவித்தார்.
வடமாகாண தேர்தலில் மட்டுமல்ல கிழக்கு மாகாண தேர்தலிலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்தே போட்டியிட்டது. நாங்கள் தனித்துவமாக இயங்குகின்ற கட்சி. எனவே எங்களுடைய தனித்துவத்தைப் பேணுவதற்காக நாங்கள் தனித்துப் போட்டியிடுகின்றோம்´ என்றார் ஹஸன் அலி.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தனித்துவத்தைப் பேணுகின்ற அதே சமயம், இந்தப் பிரதேசத்தில் உள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கும், அத்துடன் அந்தப் பிரச்சினகளைப் பற்றி மக்கள் மத்தியில் தெளிவான சிந்தனைகளை எடுத்துச் செல்வதற்கும் உரிய ஒரு களமாக வட மாகாணசபைத் தேர்தலைப் பயன்படுத்துவதற்காகவே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அங்கு தனித்துப் போட்டியிடுகின்றது என்று அவர் மேலும் தெரிவித்தார்.
´மக்களுக்குப் பணி செய்வதற்காகவே அரசாங்கத்துடன் இணைந்திருக்கின்றோம். அரசாங்கத்திற்குப் பணி செய்வதற்காக அல்ல. இன்று இந்த நாட்டிலே சிறுபான்மை சமூகம் பல பிரச்சினைளை எதிர்கொண்டிருக்கின்றது.
இந்தச் சூழலில் ஒவ்வொரு சமூகமும் தன்னை அரசியல் ரீதியாக ஸ்திரப்படுத்திக் கொள்ள வேண்டிய தேவை இருக்கின்றது. எனவே தான் நாங்கள் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகின்றோம்´ என்றார் ஹஸன் அலி.
வட மாகாண தேர்தலுக்காக வேட்பு மனு தாக்கல் செய்து விட்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஹஸன் அலி மேற்கண்டவாறு தெரிவித்தார். bbc

SLMC தனித்து போட்டியிடும் முடிவும் அரசாங்கத்துடன் இணைந்திருக்கும் முடிவும் சிறந்ததென என்ன தோன்ருஹின்றது.
ReplyDeleteமுஸ்லிம்கலுக்கெதிறான அண்மைக்கால பிரச்சினைகளின்போது SLMC அரசாங்கத்தின் பங்காளியாக இருந்தும் கூட ஆரோக்கியமான தீர்வுகளை பெற முடியவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டாலும் கூட, இதனை சற்று யதார்த்தமாக நோக்குவது அவசியமாகும்.
அதாவது முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கு சரியான பதில் அரசாங்கத்திடம் இருந்து கிடைக்கவில்லை என்ற காரணத்தை கட்டி ஆளும் கட்சிக்கெதிராக செயற்படுவது கெட்டித்தனமல்ல. ஏனெனில் இன்று பிரச்சினை முஸ்லிம்களுக்கு மட்டும்தான் என்று சொல்ல முடியாது, இலங்கையில் உள்ள ஏனைய சிறுபான்மை மக்களும் பலவிதமான பிரச்சினைகளை எதிர்கொண்டிருகிரர்கள், இதன் அர்த்தம் முஸ்லிம்களுக்கு பிரச்சினை இல்லை என்பதல்ல, உண்மையில் முஸ்லிம்களே பாரியளவு இன, மத, பொருளாதார, கலாச்சார பிர்ச்சினைகளால் பாதிக்கபட்டிருக்கிரர்கள்.
எனது கருத்து என்னவென்றால் பலருக்கும் பிரச்சினை இருக்கும் இச்சந்தர்பதில் அரசுடன் இல்லாத முஸ்லிம் கட்சிகலாலோ அல்லது ஏனைய கட்சிகளாலோ எதுவும் செய்ய முடியாமல் (உள்ளது என்பதுதான் உண்மை) உள்ள நிலையில் அதிலிருந்து வெளியேறி என்ன சாதிக்க முடியும் என்பது கேள்விக்குறிதான்?????????.
அதன் அடிப்படையில் SLMC யின் முடிவை விமர்சிப்பதை விட ஆளும் தரப்பில் இருந்துகொண்டு பிரச்சனைகளை எவ்வாறு மேலும் ஆக்கபூர்வமாக கையாள திட்டமிட அனுசரிப்பதே சிறந்தது என தோணுகின்றது.
ஏனெனில் முஸ்லிம்களின் பலம் பொருந்திய ஒரே ஒரு கட்சியாக இருந்த SLMC ஏற்கனவே வீழ்ச்சி கண்டுள்ளது என்று சொல்லப்படும்போது அதை மேலும் வீழ்த்தாமல் கட்டியனைப்பதே சிறந்ததாகும்.
உரிமைக்காகப் போராடாமல் அடிமைச் சேவகம் செய்யும் கட்சி ஐயா உங்கள் கட்சி. வாக்காளர்கள் விழிப்பாயிருக்க வேண்டும் கோடரிக்காம்புகளிடமிருந்து பாதுகாப்புப் பெற அல்லாஹ் அருள் புரிவானாக!
ReplyDeleteAll are lie. You group now is doing as political business. Cheating our commmunity. We have a big doubt that you are very silence when the BBS broke down 17 mosques around the Island, and some opposit activities to muslim community recently. So, really we know that you an agent of this government defenetly.
ReplyDeletesecretary sir "NALLA COMADY VIDUREENGA,ELECTION VANTHA SPECIALLA ONGADA COMEDY MICHCHAM NALLA IRUKKUM" any way convey this statement to Hon.Naseer (mpc),yesterday i read his statement in jaffna muslim that he says SLMC is with the not for the development
ReplyDelete"அரசாங்கத்துடன் சில புரிந்துணர்வுகளைக் கொண்டுள்ள உங்கள் கட்சி, அதற்காக அரசாங்கத்துடன் இணைந்துதான் தேர்தல்களில் போட்டியிட வேண்டுமென்று ஒப்பந்தம் எதனையும் செய்து கொள்ளவில்லை" என்கிற உங்களின் வாதத்திற்கமைய, அரசாங்கம் கொண்டு வரும் பிரேரணைகளுக்கும் எல்லா சட்ட மூலங்களுக்கும் ஆதரவளிப்பது என்று ஒப்பந்தம் செய்துள்ளீர்களா? என்று கேட்க விரும்புகின்றேன்.
ReplyDeleteநீங்கள் அரசுக்கு முட்டுக் கொடுக்கச் சென்று 2/3 பெரும்பான்மைப் பலத்தைக் கொடுத்து 18வது அரசியலமைப்புத திருத்தத்திற்கு ஆதரவும் வழங்கிய பின்னர்தான் பின்தான் இந்த நாட்டில் இவ்வளவு அராஜகங்களும், அடக்கு முறைகளும் நடைபெற்று வருகின்றன.
கிழக்குத் தேர்தலில் அரசுக்கு முஸ்லிம் வாக்குகளை மொத்தமாக விற் பின்னர்தான் பொது பல சேனா இந்த நாட்டில் உக்கிரம் பெற்றுள்ளது.
இரண்டு மாகாண அமைச்சுப் பதவிகளுக்காக கிழக்கு முஸ்லிம்களின் வாக்கை தாரைவார்த்ததனால்தான் மாகாண சபைகளுக்கான அதிகாரத்தைக் குறைக்கும் 'திவி நெகும' சட்ட மூலத்திற்கும் வாக்களித்து ஆளையாள் சாட்டி குற்றம் சொல்லிக் கொண்டீர்கள்
நீங்கள் மக்களுக்குப் பணி செய்ததை விட, உங்கள் கட்சிக்கு எடுபிடியாக இருந்த ஏஜென்டுகளுக்கு சமாதான நீதவான் பதவிகள் கொடுத்ததுதான் அதிகம்.
சும்மா வடக்கு மக்களையும் ஏமாற்ற கற்பனை அறிக்கைகளை விடாதீர்கள் ஹஸனலி அவர்களே..!
-புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-
புவி றஹ்மதுழ்ழாஹ் அவர்களே நீங்கள் கூரும் அத்தனை கருத்துகளும் நியாயமானதே உங்களை வரவேற்கின்றேன்
DeleteSLMC miuslimkalukku saiyum pani
ReplyDeletePALLI UDAITHTHAL
PALLI MOODUTGAL
MUSLIM WARTHAKA NILAIYANKAL UDAITHAL
HIJAB AKATRUTHAL
IRAICHI KADAKAL MOODUTHAL
உங்களுது வாடிக்கையாளர்கள் உண்மையை யதார்த்தத்தை புரியும் மட்டும் உங்கள் வியாபாரம் நன்றாக நடக்கும். அந்த எல்லாம் வல்ல அல்லாஹு தான் இதற்கான தீர்ப்பை தர வேண்டும்.
ReplyDeleteஅபிவிருத்தியை விட முஸ்லிம் மார்க்கம் பெரியது என்று கூறிய நீங்களா? எப்பொது அப்படி கூறுவது.என்ன ஆச்சரியம். வெட்கம் கெட்டவர்கள்.
ReplyDeleteமுஸ்லிம் காங்கிரஸ் தமிழ் கூட்டணியுடன் வடக்கு தேர்தல் கேட்டிருந்தால் அரசாங்கத்திற்கு சற்று பயத்தை கொடுத்திருக்கும்.அதை விட்டுவிட்டு மேலும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிய கதையாக உள்ளது.
மனதில் சரியான உணர்வுடன் யோசித்தால் தற்கால பிரச்சினைகள் தொடர்பாக முஸ்லீம் காங்கிரஸ் மாத்திரம் அல்ல, அரசு சார்ந்த பெளஸி, காதர் ஹாஜி, பைசர் முஸ்தபா & ஆலவி மற்றும் அதாஉல்லா காட்சி, றிசாத் + ஹிஸ்புல்லஹ் கட்சி எவரும் ஆக்கபூர்வமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இன்னிலையில் வடமாகாண தேர்தலில் தேர்தலில் மாத்திரம் அல்ல ஏனய மாகாணங்களிலும் நாம் மிக நொயாயமாக யோசிக்கவேன்டும்.அரசுக்கு எதிராக ஒரு அளுத்தத்தை பிரயோகிக்க வேன்டுமா வேன்டாமா? ஒரு நாட்டின் சமய அனுஸ்டானங்களை பின்பற்றவும் சமய ஸ்தலங்களை பாதுகாகவும் அரசு தன்னிச்சையாகவே கடமைப்பட்டுள்ளது. இவ்வளவும் நடந்தபிறகும் அரசு எதுவுமே செய்யாமல் இருப்பவர்களுடன் இத்தேர்தலில் நாம் எவ்வாறு கூடிக்குலாவுவது என்பது பற்றி யோசிக்கவேன்டும். வெற்றிலைக்கு வாக்குப்பண்ண கேட்கும் றிசாத்தின் நியாயயம் என்ன? பூரணமாக அரசுடன் இருப்பவர்களின் மெளனம் ஏன்? மக்களே வெற்றிலைக்கால்லாமல் யாருக்கும் நீங்கள் வாக்குப்பண்ணலாம் என்பதே என் செய்தி.
ReplyDeleteஐயா, மக்கள் பணி மக்கள் பணி எதை சொல்கின்றீர்கள். மக்கள் என்பது உங்கள் பிள்ளைகளையா? அறிக்கைகள் விடும் போது உங்கள் தலைவர் ஒரு அறிக்கையும், நீங்கள் ஒரு அறிக்கையும், உங்கள் தவிசாளர் ஒரு அறிக்கையும் விட்டுக்கொண்டிருக்கின்றார்களே இதுதான் உங்கள் கட்சியின் கோட்பாடா?
ReplyDeleteMuslim community understood your fake activities, we will teach you upcoming elections, now count time starts for your losses. what kind of development done by SLMC, especially in eastern province, Some development done by only NGO nothing from government
ReplyDeletePuvi Rahmatullah
ReplyDeleteI agree with you. I wish there was a button for "like".