Header Ads



6 பேருக்கு ஒரே தடவையில் மரண தண்டனை தீர்ப்பு - களுத்துறை நீதிமன்றம் வழங்கியது

(Tm) ஒருவர் கொலைச்செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான வழக்கில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட அறுவருக்கு களுத்துறை மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து இன்று 31-07-2013 தீர்ப்பளித்துள்ளது.

களுத்துறை மேல் நீதிமன்ற நீதவான் அமல் திலகரட்னவே சந்தேகநபர்களை குற்றவாளிகளாக இனங்கண்டு அவர்களுக்கு மரண தண்டனை விதித்துள்ளார்.

2003 ஆம் ஆண்டு இடம்பெற்ற கொலை தொடர்பிலேயே இந்த அறுவரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

No comments

Powered by Blogger.