திரைப்படங்கள், தொடர் நாடகங்கள் பார்ப்பது நோன்பை பாதிக்குமா..?
(அரபு மூலம் - கலாநிதி யூஸூப் அல் கர்ழாவி.
மொழிபெயர்ப்பு. ஏ.பீ.எம்.மஹீஸ்)
வினா?
தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், திரைப்படங்கள், தொடர்நாடகங்கள் பார்ப்பது நோன்பை பாதிக்குமா?
விடை.
புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே. ஸலாத்தும் சாந்தியும் நபி(ஸல்) அவர்கள் மீது உண்டாவதாக.
தொலைக்காட்சி ஒரு ஊடகமாகும் அதில் நன்மையும் உண்டு தீமையும் உண்டு. ஊடகங்களுக்கான இஸ்லாமிய சட்டம் அதைப்பயன்படுத்துகின்ற முறை, நோக்கத்தை வைத்து தீர்மானிக்கப்படும். தொலைக்காட்சி வானொலி, பத்திரிகை போன்றது. அவற்றில் நல்லவிடயங்களும் உண்டு. தரக்குறைவானவைகளும் உண்டு.
ஒரு முஸ்லிம் அவற்றில் நல்லவற்றிலிருந்து பயன்பெறவேண்டும். தீமையான அசிங்கமானவற்றிலிருந்து தவிர்ந்துகொள்ள வேண்டும். இது நோன்பு காலங்களில் மாத்திரமில்லாமல் எல்லாக்காளங்களுக்குமான பொதுவான வரையறையாகும். நோன்பாளிகள் தங்களுடைய நோன்பு வீனாகிவிடாமளிருப்பற்கும் நன்மைகளை இழந்திடாமளிருப்பதற்கும் இவ்விடயத்தில் அதீத பேனுதலுடன் நடந்து கொள்ள வேண்டும்.
தொலைக்காட்சி பார்ப்பது முழுமையாக ஹராம் என்றோ ஹலால் என்றோ என்னால் கூறமுடியாது. பார்க்கின்ற நிகழ்ச்சிதான் ஹராமா? ஹலாலா? என்பதை தீர்மானிக்கும்.
மார்க்கச்சொற்பொழிவுகள், செய்தி, பிரயோசனமான நிகழ்ச்சிகள் போன்ற நல்ல விடயங்களை பார்ப்பது செவிமடுப்பது ஆகுமானது.
நடனங்கள், அரைநிர்வான காட்சிகள் போன்ற மோசமான விடயங்களை பார்ப்பது செவிமடுப்பது ஹராமாகும். அதேபோல் இறைசிந்தனையை விட்டும் பராமுகமாக்கும் எல்லா ஊடகங்களும் ஹராமாகும்.
தொலைக்காட்சி பார்ப்பது, வானொலி கேட்பது போன்ற செயற்பாடுகள் தொழுகைபோன்ற அடிப்படைக்கடமைளைவிட்டும் பராமுகமாக்கும் பட்சத்தில் அச்செயற்பாடுகள் ஹராமாக மாறும். தொழுகையை விட்டு பராமுகமாக்கும் எந்தவொருசெயலும் ஹராமாகும்.
அல்லாஹ் மதுவையும் சூதையும் ஹராமாக்கியதற்கான காரணத்தை குறிப்பிடும்போது அவை மனிதர்களை தொழுகையை விட்டும் பராக்காக்குவதாக குறிப்பிடுகின்றான்.
நிச்சயமாக சைத்தான் மது, சூதின் மூலமாக உங்களுக்கு மத்தியில் வெறுப்பையும் குறோதத்தையும் ஏற்படுத்த விரும்புகின்றான். மேலும் உங்களை அல்லாஹ்வின் சிந்தனை, தொழுகையை விட்டும் தடுக்க முயற்சிக்கின்றான்.(அல்-மாயிதா : 91)
தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒருங்கினைப்பாளர்கள் எப்பெழுதும் பொதுமக்களுக்கு தேவையானவற்றை வழங்குவதில் அல்லாஹ்வை பயந்து கொள்ளவேண்டும். அருல்மிகு ரமழானின் கண்ணியத்தை பாதுகாக்க, அல்லாஹ்வுக்கு அடிபணிந்து நன்மைகளை அதிகரித்துக்கொள்ள மனிதர்களுக்கு உறுதுனையாக இறுக்க குறிப்பாக ரமழான் காலத்தில் தேவையானவற்றை வழங்குவதில் அல்லாஹ்வை பயந்து கொள்ளவேண்டும்.
இல்லாவிடின் தனது பாவங்களையும் சுமந்து நிகழ்ச்சிகளை பார்க்கின்றவர்களின் பாவங்களையும் சுமக்க வேண்டும்.
மறுமைநாளில் அவர்கள் தங்கள் பாவச்சுமைகளையும், அறிவில்லாமல் அவர்கள் வழிகெடுத்தோரின் பாவச்சுமைகளையும் சுமந்துகொள்ளட்டும்.( அந்-நஹ்ல் : 25)
.jpg)
Post a Comment