'எமது பூர்வீகம் பெரும்பான்மை சமூகங்களுக்கு உரித்துடையதாகிவிடும்'
(ஏ.எல்.ஜுனைதீன்)
எமது தலைமைத்துவத்தின் குரலை நசுக்க வேண்டும் என்பதற்காகவே கடும் போக்குவாதிகளால் உருவாக்கப்பட்டவர்கள்தான் அமைச்சர்களான அதாஉல்லா, ரிஷாட் பதிஉத்தீன், ஹிஸ்புல்லா போன்ற குறுநிலத் தலைவர்கள். நன்கு திட்டமிடப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக இவர்கள் ஒற்றர்களாகச் செயற்படுவதன் காரணமாகவேதான் எமது பூர்வீக நிலங்களும், பள்ளிவாசல்களும் பறிபோய்க் கொண்டிருக்கின்றன. என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் தைக்காநகர் பிரதேசத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசுகையில் தெரிவித்துள்ளார்.
மாகாண சபை உறுப்பினர் நஸீர் இங்கு தொடர்ந்து பேசுகையில் மேலும் கூறியதாவது,
இன்று முஸ்லிம்களாகிய நாம் முக்கியமான ஒரு காலச் சூழலில் இருந்து கொண்டிருக்கின்றோம். இந் நாடு சுதந்திரமடைவதற்காகவும் நடைபெற்று முடிந்துள்ள 30 வருட கால யுத்தத்தின் போதும் நாட்டின் இறைமைக்காகவும் ஒற்றுமைக்காகவும் ஏராளமான உயிர்களையும் பெறுமதியான சொத்துக்களையும் முஸ்லிம் சமூகம் இழந்தது.
இவ்வாறான வரலாற்று உண்மைகள் இருக்கின்ற வேளையில் முஸ்லிம்கள் செய்த தியாகங்களை மறந்து பெரும்பான்மை சமூகத்தின் கடும் போக்குவாதிகள் கல்வி, தொழில், குடியேற்றம், மதஸ்தலங்கள் கலாச்சாரங்கள் என்பனவற்றின் மீது குறி வைத்து தாக்குவது என்பது இந்நாட்டை இன்னுமொரு மியன்மாராகக் கொண்டு செல்வதற்கு முற்படுகின்றனர் என்றே கூறல் வேண்டும்.
அபிவிருத்திக்காகவும் சலுகைக்காகவும் எமது சமூகத்தின் உரிமைகளை விட்டுக் கொடுப்பதால் இன்னும் பத்து வருடங்களில் எமது பூர்வீகம் பெரும்பான்மை சமூகங்களுக்கு உரித்துடையதாகிவிடும். இந்நிலையை உணர்ந்துதான் முஸ்லிம் காங்கிரஸ் அபிவிருத்தி என்ற மாயைக்குள்(பொய் தோற்றம்) சிக்கி விடாமல் முஸ்லிம்களின் வரலாறு, பூர்வீகம், கலாசாரம், சமயம் என்பனவற்றைப் பாதுகாப்பதற்கு போராடி வருகின்றது.
அபிவிருத்தி என்பது சலுகையல்ல. சலுகைக்காக உரிமையை விட்டுக் கொடுக்க முடியாது. இதை உணர்ந்து எமது தலைமை அபிவிருத்திக்காக யாரிடமும் கையேந்தாமல் இருப்பதனால்தான் நாடாளுமன்றத்திலும்இ அமைச்சரவையிலும் ஏன் சர்வதேசத்திலும் தலை நிமிர்ந்து முஸ்லிம் சமூகத்தின் குரலாக ஒலிக்க முடிகின்றது.
தமிழ் சமூகம் எத்தனையோ இழப்புக்களைச் சந்தித்த போதும் அச் சமூக மக்களின் ஒற்றுமையின் பலத்தினால்தான் சர்வ தேசத்தின் கவனத்தை ஈர்த்தெடுத்தது. இதே போன்றதொரு சேயற்பாட்டை முஸ்லிம் சமூகமும் கையாளும் போதுதான் எமது இலக்கை அடையமுடியும்.
இதற்கு நாம் ஒற்றுமைப்படுவதுடன் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும் நூறு வீத மக்கள் ஆதரவையும் பெற்றுக் கொள்ளவேண்டியது மிகவும் அவசியமாகும். இவ்வாறு அவர் கூரினார்.

assalamu alaikkum nice speech
ReplyDeleteசார், நீங்கள் கூறுவது போல் உறுமைக்காக குரல் கொடுத்ததாக பாராளுமன்றத்திலோ, மாகான சபையிலோ அல்லது மக்கள் போராட்டமோ நீங்களும் உங்கள் தலைமைத்துவமும் முன்னெடுத்ததாக தெரியவில்லையே. நிட்சயமாக ஒன்று மட்டும் உண்மை நீங்களும் உங்கள் சாகாகளும் உங்கள் தலைமையும் நன்றாக பதவிகளும் சலுகைகளும் அனுபவித்துக் கொண்டிருகிறீர்கள்.
ReplyDeleteஒரு இனத்தின் உறுமைக்காக போராடிய தலைவர்களையும் அவர்களது தோழர்களதும் வாழ்க்கை வரலாற்றை கொஞ்சம் படித்துப் பார்த்து உங்களையும் உங்களது தலைமையையும் ஒப்பிட்டு பாருங்கள் அப்போது தெரியும் நீங்கள் யார் என்பது.
இன்னும் நீங்கள் உரிமை உரிமை என்று பேசியே வாய் கிழிந்தது மட்டுமல்ல ...உடுத்திருக்கும் உடையும் அவிழ்ந்து ஜட்டியுடன் மட்டும் முஸ்லிம் சமூகம் நிற்பதும் உங்களது கட்சி தலைமைக்கு புரிந்தும் புரியாத பாவனையில் இருப்பது தான் பெரிய விந்தை.
ReplyDeleteவேட்பு மனுக்களெல்லாம் நேற்றே தாக்கலாகி விட்டது. இப்போது நீங்கள் முஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமை பற்றிப் பேசுவது டூ லேட் சார்.
ReplyDeleteஆமா.. உங்க தலைவர் யாரு?
-புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-
கௌரவ மா.உ.நஸீர் அவர்களுக்கு
ReplyDeleteஅபிவிருத்தி என்பது சலுகையா? இல்லை உரிமையா? அல்லது அபிவிருத்தியும் எமது உரிமையா? என்பது ஒரு புறம் இருக்கட்டும்.
ஏனென்றால் இன்றைய முஸ்லிம் அரசியலில் தன்னால் முடியாதது எது? எதிரியால் முடிந்தது எது? என்பதைப்பார்த்து வரைவிலக்கணம் சொல்லும் நிலை தான் இருக்கிறது.
அபிவிருத்தி என்பது பல வேளைகளில் ஓட்டுப்போட்ட மக்களின் தேவையையும், அரசியல்வாதிகளின் ஆண்மையையும் பொறுத்து அமைந்துவிடுவதுண்டு.
உதாரணமாக வடக்கிலிருந்து புலிப்பயங்கரவாதிகளால் விரட்டியடிக்கப்பட்ட முஸ்லிமகளை மீளக்குடியேற்றுவதற்குத்தேவையான பாரிய நிதியும் அதிகாரமும் வெறும் அறிக்கைகளை விடும் வெத்து வேட்டு அரசியல்வாதிகளாலோ, அந்த அறிக்கைக்கு கருத்துச் சொல்லும் பார்வையாளர்களாலோ முடியாத காரியம். தானும் சேர்த்து புலிகளால் விரட்டப்பட்ட அமைச்சர் றிசாத் பதியுதினைப் பொறுத்த மட்டில் ஓட்டுப் போட்ட மக்களுக்காக அதிகாரத்தில் இருக்கும் வரை அவர் முடிந்த வழிகளிலெல்லாம் அபிவிருத்தியைச் செய்கிறார்.
அப்படியிருக்க ஓட்டுப் போட்ட மக்களுக்காக ஒரு செங்கல்லைத்தானும் கொண்டு போடாத வெத்துவேட்டுக்களின் முளையற்ற வார்த்தைகளை அவர் கணக்கிலெடுக்கமாட்டார்.
ஏனென்றால் அவர் வலி உணர்ந்தவர். கோசங்களாலும் வேசங்களாலும் மக்களுக்கு மாளிகைகட்டாது. ஒன்றிக் கொள்ள ஒரு குடிசையாவது நிஜத்தில் கட்டவே முயற்சிப்பார்.
அவரைப் போன்றவர்களைப்பார்த்து தூற்றுவோர்க்கே தந்தம் கடுக்கும்.
அதே நேரம் இளைய தளபதி அமைச்சர் பஸீர் சேகு தாவுதை எடுத்துக் கொள்ளுங்கள் 'மட்டக்களப்புக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு இல்லாத குறை என்னால் தீர்ந்தது என்று தான் அமைச்சராகியிருப்பதின் நோக்கத்துக்கு வியாக்கியாணம் கூறுகிறார். ஓட்டுப்போட்டு வாழ்வளித்த மட்டக்களப்பு மக்களின் இன்றைய தேவை இதுவா?
அவர் அமைச்சராகியதால் அவருக்க சில ரூபாக்கள் சம்பளம் கூடி பின்னால்வரும் ஆமிக்காரனும் கொஞ்சம் கூடும். தவிர, வாக்களித்த மக்களுக்கு என்ன கிடைக்கும்? இப்படியே மக்களைக் காயப் போடுவது தானா?
நான் இப்படிச் சொன்னால் அபிவிருத்திக்காக உரிமையை விட்டுக் கொடுப்பதா? இப்படியெல்லாம் விட்டுக் கொடாததினால் தான் இன்று என் தலைவன் தேசத்திலும் சர்வதேசத்திலும் முஸ்லிம்களின் உரிமைக்காக தலைநிமிர்ந்து குரல் கொடுக்கிறான்' என்று ஒரு நகைச்சுவையை வெளியிட்டுள்ளீர்கள்.
மா.ச.உ.நஸீர் அவர்களே! உங்கள் தலைவர் சர்வதேச மட்டத்தில் குரல் கொடுப்பது இருக்கட்டும். குறைந்தது பார்லிமென்டில் வாய்திறக்கச் சொல்லுங்கள்.(குறைந்தது கௌரவ ஹூனைஸ்பாருக்.பா.உ அவர்களுடன் உக்கார்ந்து சாப்பிடச் சொல்லுங்கள்)
எப்பொது அரசு அமைந்தாலும் 'மக்கள் வற்புறுத்துவதால்...'என்று சொல்லி தலைவர் அ.அ.உள்ள அமைச்சராகி விடுகிறார். இந்தக்கட்சியை பொறுப்பெடுத்து 13 வருடமாகிறது. இதுவரை தலைவர் தன் அமைச்சினூடாக கிழக்கில் கொண்டுவந்து கொட்டிய அபிவிருத்திகளென்ன? பட்டியல் தரமுடியுமா?
நான் இப்படிச் சொன்னால் சலுகைக்கு அலைபவர் அல்ல எம் தளபதி அவர் சா நக்கிய த்தால் உரிமை வெல்பவர் என்பீர்கள். எங்கே குறைந்தது வருடத்துக்கு இரண்டு உரிமை என்ற வகையில் 26 உரிமைகளாவது இதுவரை ரஊப் கக்கிம் அவர்கள் பெற்றுத்தந்திருக்கவேண்டும். பட்டியல் தரமுடியுமா? ஆனால் உரிமைகளை விலை பேசிவிற்றதற்கு ஆதாரமுண்டு உதாரணம் தரட்டுமா?
சுதந்திர அணைக்குழுக்கள், எல்லையற்ற ஜனாதிபதி தேர்தல் போட்கெ;கான ஏற்பாடு,திவிநெகும .....நஸீர் அவர்களே திவிநெகுமைக்கு நீங்களும் தான் கை உயர்த்தினீர்கள். இப்படி பட்டியல் நீளும்
மா.ச.உ.அவர்களே முஸ்லிம் அரசியல் வாதிகளால் இலங்கையில் இப்போது இரண்டு விடயத்தைத்தான் சாதிக்க முடியும்.1. உரிமையை வெல்வது (– அது விற்றுப்பிழைக்கப்படுகிறது) 2. அபிவிருத்திகளை மேற்கொள்வது.
உரிமையைத்தான் எல்லோரும் கொட்டைவிட்டுவிட்டார்கள். அடுத்துள்ள அபிவிருத்தியையாவது உல்லாச வாழ்வு தந்த கிழக்கு மக்களுக்கு செய்ய உங்கள் தலைவர் விரும்பவில்லை அல்லது அவரால்; முடியாது. இது தான் உண்மை.
இந்த கையாலாக தனத்தை மறைக்க தலைவர் தனியாக கதை சொல்லித்திரிய நீங்கள் வேறாக கதை சொல்கிறீர்க்ள். தான் அமைச்சரானால் சாதனை?! அடுத்தவரானால் எலும்புத்துண்டா?
–ஐயா! விரும்பிய பசுக்கள் தின்னட்டும் விடுங்கள்.
you all are ok youngsters. if not change the leader ship SLMC no longer life SLMC be cause Asraf sir already dua to allah if the SLMC
ReplyDeletenot useful for Muslims community SLMC will destroy this DUA has done before he die.
Sonaham: your comment is so suitable to Hon.Naseer,
ReplyDeletemy kind request to the author of "Jaffnamuslim" is to convey these comments to Hon.Naseer(dont know whether he can read comments)
it is very hard to secure our society Untill the people like Hon.Naseer & co available......
மாகாண சபை உறுப்பினர் அவர்களே, உங்கள் தலைவரும், மற்றும் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களும் பாராளுமன்றம் மற்றும் அமைச்சரவைக்கு சென்று வருகின்றார்கள்தானே, இவர்களுக்கு மட்டும் பாராளுமன்றில் பேசுவதற்கு என்ன. வாய்க்குள் கொளுக்கெட்டை முழுங்கி இருக்கின்றார்களே. அபிவிருத்தியும் ஏற்படாமல் இருந்திருந்தால் உங்கள் தலைவர் எம் சமூகத்தை நோர்வைக்கும், அமெரிக்காவுக்கும் வித்திருக்க வேண்டும். இறைவன் காப்பாற்றினான் . நீங்களும் உங்கள் தவைலரும் ஒரு செங்கல் கூட நடுவதற்கு நடப்பிணம் அற்றவர்கள்தானே. கண்டிக்கு சென்று ஜனாதிபதியுடன் பேசுங்கடா என்று அனுப்பினால் வாகனத்துக்கு டீசல் பெற்று வந்தவர்கள்தானே நீங்கள். மாறாப்பை தட்டுவதற்கு பதிலாக ஏதேனுமொறு ஹாட்வெயாருக்கு சென்று பூட்டை வாங்கி வாயில் பூட்டுங்கள்
ReplyDeleteJaffna Muslim இப்படி பட்ட செய்திகளை வெளியிடுவதை தவிர்த்து, மறுக்கப்பட்ட பட்டியலில் சேர்க்க வேண்டும். ஏனனில் இதில் கூறப்பட்ட செய்திகளின் உண்மை தன்மையையும், பொருத்தப் பாடையும் நோக்கும் போது அது பூச்சிய மட்டத்தில் உள்ளது. இவ்வாறு மற்றவர்களின் மேல் பலி சுமத்தி தாம் தப்பித்துக்குள்ளும் முயற்சிகளுக்கு இத்தளம் துணைபோகக் கூடாது. சமூகப் பொருப்பற்ற அணைத்து அரசியல்வாதிகளின் செய்திகளையும் மேற்படி பரிசீலிக்க முடியுமானால் மிக்க நன்று. மேடைகளில் ஏறி ஏமாற்று கதை கூறி பழகியவர்கள் தற்போது இவ்வாறான தளங்களின் மூலம் பிரசித்தியடைய முயற்சிப்பதுதான் இங்குள்ள கொடுமை!!!!! எவ்வளவு காலம்தான் மக்களை மடையர்கள் என நம்பி இவ்வாறான மோட அரசியல்வாதிகள் அரசியல் செய்யப்போகிறார்கள்???? பார்ப்போம் பொறுத்திருந்து ..............
ReplyDeleteMr Mohammethu Sahir Sulaima Lebbe: neenga alukkal ippadi esinal naseer paavam,Naseerukku seivathatkuum onrum illa,pakkathila uthumalebbe,athaullah ponravarhal seiyyum velaiyai paarthu enna seivathenru thriyama summa arikkai viduraar,athukku poi neenga athai publish panna venamendu sonnal enna niyayam ithu............avaru paavamthane...
ReplyDelete