Header Ads



இலங்கையர்கள் இருந்த கப்பல் கடலில் மூழ்கியது..?

மூன்று வருடங்களுக்கு முன்னர், சோமாலிய ஆயுததரிகள்  கடத்திச் செல்லப்பட்ட இலங்கை மாலுமிகள் உட்பட 23 பேரின் பாதுகாப்பு குறித்து அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

கப்பம் கோரி, தடுத்து வைக்கப்பட்டிருந்த சரக்கு கப்பல் மூழ்கியுள்ளதாக ரொய்ட்டர் செய்தி ஸ்தாபனம் செய்தி வெளியிட்டுள்ளது.

அனர்த்திற்கு உள்ளான அந்த கப்பலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நான்கு வெளிநாட்டு மாலுமிகளும் பல சோமாலிய ஆயுததரிகளும் மரணித்துள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுதவிர, மேலும்  13 மாலுமிகள் காணாமல் போயுள்ளனர்.

கடந்த 2010 ஆம் ஆண்டு நொவம்பர் மாதம் 26ஆம்  திகதி ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தில் இருந்து கென்னியா நோக்கி பயணிக்கும் போது, மலேசியாவிற்கு சொந்தமான எம் வீ எல்படோ சரக்கு கப்பல் கடத்திச் செல்லப்பட்டிருந்தது.

இந்த கப்பல் கடந்த ஒருவாரகாலமாக நீரில் மூழ்கிய வண்ணம் இருந்த போதிலும் திடிரென நேற்று முற்றாக கப்பல் மூழ்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவல், சோமாலிய ஆயுததரிகளின் முக்கிய தளமென கருதப்படும் ஹரத் ஹீரியிலிருந்து கிடைக்க பெற்ற தொலைபேசி அழைப்பின் ஊடாக இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொலைபேசியில் உரையாடிய ஹசன் என்ற ஆயுததரிகள்  தம்வசம் அந்த தருணத்தில் சிறிய படகுகள் இல்லாதன் காரணமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த மாலுமிகளை காப்பாற்ற முடியாமல் போயுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

காணாமற்போனவர்களை மீட்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக சோமாலிய கடற்பாதுகாப்பிற்குப் பொறுப்பான ஐரோப்பிய கடற்படை குறிப்பிட்டுள்ளது.

M.A.அல்பெடோ என்ற இந்தக் கப்பலின் பிரதான பொறியியலாளராக இலங்கை மாலுமியான ரொஹான் வெக்வெல்ல செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.