சாய்ந்தமருது Beach Park நல்லதா..? கெட்டதா..??
(Dr. N. Ariff)
உண்மையில் இதுவொரு நல்ல விடயம். நல்ல விடயங்கள் எப்படி, யாரால் செய்யப்பட்டாலும், பாராட்டி ஊக்குவிக்க வேண்டியது சகலரதும் பொறுப்பாகும். சாய்ந்தமருதைப் பொறுத்தவரை சனநெருக்கடிமிக்க அடர்த்தியான ஒரு பிரதேசமாகும். பெருகி வரும் சனத்தொகைக்கு ஈடுகொடுக்கக் கூடியவாறு வெறுமையான நிலங்களற்றதாகும். இத்தகையதொரு நிலைமையில் சிறுவர்களாயினும் சரி, பெரியவர்களாயினும் சரி, இயற்கையோடிணைந்த பொழுது போக்கக் கூடிய இடமொன்று இல்லாதிருப்பது துரதிர்ஷ்டமே.
தற்கால மனித வாழ்க்கை இயந்திரம் போன்று ஓய்வில்லாமல் சுழன்று கொண்டே இருக்கின்றது. இயற்கையை ரசித்துக் கொண்டு சில நிமிடங்களாயினும் நிம்மதியாக மூச்சு விடக்கூடிய இடம் இல்லையே என பலரும் அங்கலாய்த்துக் கொண்டிருக்கும் வேளையில் கல்முனை மாநகர சபை, Beach Park யை நிர்மாணிப்பது சந்தோஷமான விடயம். இருப்பினும் கடந்த சில நாட்களாக நடைபெறுகின்ற விடயங்களைப் பார்க்கும் போது, கைக்கெட்டியது வாய்க்கெட்டாமல் போய் விடுமோ என்பதைப் போலிருக்கின்றது.
தனிப்பட்ட கோபதாபங்களை, அரசியல் லீலைகளை பொது விடயங்களிலே காட்டி, செய்வதுமில்லை செய்யவிடுவதுமில்லை என்றிருந்து விட்டு மீண்டும் மக்கள் முன் போய் எந்த முகத்தோடு நிற்பது. செய்வது யாராக இருந்தாலும் நல்ல விடயத்தை தடுப்பது முறையில்லையே. மேலும், கரையோர பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட வேண்டிய அதே நேரம் மக்களின் இந்தத் தேவையும் நிறைவேற வேண்டும். எனவே இந்த விடயத்திலே சம்பந்தப்பட்ட இருதரப்பினரும் விட்டுக்கொடுக்க வேண்டும். ஏனெனில் நடைமுறையிலே எந்த விடயத்தை எடுத்துக்கொண்டாலும் 100மூ கொள்கை ரீதியாகவோ அல்லது 100மூ செயல் ரீதியாகவோ நடைமுறைப்படுத்த முடியாது என்பது பொதுவான உண்மை.
இதில் பொது நிறுவனம் ஒன்றும் சம்பந்தப்படுவதனால், குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் இதன் நிர்மாணம் முடிக்கப்பட வேண்டுமல்லவா? இல்லையாயின் இதற்கென ஒதுக்கப்பட்ட நிதி மீளப்பெறப்பட்டால், அரைகுறையாக நின்று விடுமல்லவா?
எனவே சம்பந்தப்பட்ட தரப்பினர் கூடியகெதியில் பிரச்சினைகளைக் களைந்து மக்களுக்கு நிம்மதிக் காற்றை சுவாசிக்க ஆவண செய்ய வேண்டுமென கேட்டுக்கொள்கின்றேன்.

இப்படியான ஒரு இடம் நமது ஊருக்கு கட்டாயம் வேண்டிய ஒன்று.
ReplyDelete(ஒற்றுமை கைற்றை பற்றி பிடிங்கள் )வெற்றி பெறலாம்
-------சிராஜ்தீன் சிறோ------
சகோ.Siraj இப்படியான இடம் நமது ஊருக்கு கட்டாயம் அவசியம் என்று குறிப்பிடுவதை விட கல்முனை மாநகர பிரதேசத்தில் அமைவது அவசியம் என்றால் இன்னும் நன்றாக இருக்கும்...மாநகர வரி இறுப்பாளர் அனைவரினதும் நிதியில் ஒரு கோடிக்கு மேல் செலவு செய்யப்பட்டுள்ளதனால் பொதுவானதாக கருதுவோம்.
ReplyDeleteplease be corporate otherwise all will be in vain.
ReplyDeletePlease if you have any other idea to do another project, you can propose and do it any where as you like. All metters are not correct as we think but there will be an exception. please leave it to do it's completion as soon as possible and we can see what would be it. Insha Allah.
A brother out of Kalmunai Area.