Header Ads



வவுனியா, முல்லைத்தீவு மாவட்ட வேட்பு மனுவை அமைச்சர் றிசாத் கையளித்தார்


(இர்ஷாத் றஹ்மத்துல்லா)

வடமாகாண சபை தேர்தலில் போட்டியிடும் வகையில் முல்லைத்தீவு,வவுனியா மாவட்டங்களுக்கான ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தமது வேட்பு மனுக்களை இன்று தாக்கல் செய்தது.

முல்லைத்தீவு மாவட்டத்துக்கான வேட்பு மனுவி்னை பொதுஜன ஜக்கிய முன்னணியின் செயலாளரினால் அதிகாரமளிக்கப்பட்ட அமைச்சர் றிசாத் பதியுதீன் மற்றும் முல்லை மாவட்ட முதன்மை வேட்பாளரும், முன்னால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான சதாசிவம் கணகரத்தினம் ஆகியோர் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகர் என்.வேதநாயகத்திடம் கையளித்தனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களில் மூவர் அமைச்சர் றிசாத் பதியுதீனை தலைவராக கொண்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வேட்பாளர்களாவார்.

அதே போல் வவுனியா மாவட்ட வேட்பு மனுவினையும் அமைச்சர் றிசாத் பதியுதீன் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி பந்துல ஹரிச்சந்திரவிடம் கையிளத்தார்.வவுனியா மாவட்டத்தில் அமைச்சர் றிசாத் பதியுதீனின் கட்சி சார்பில் நால்வர் போட்டியிடுகின்றனர்.அதில் இருவர் முஸ்லிம்கள்,தலா ஒருவர் தமிழ்,மற்றும் சிங்களவர் என்பது குறிப்பிடத்தக்கது.

முல்லை மாவட்ட வேட்பளார் விபரம்.

சதாசிவம் கணகரத்திணம்,அந்தோனிபிள்ளை ஜெயராஜ்,நாகமணி ரட்ணராஜா,உக்குரலாகே ராஜகருண,அருள் ஜெணிபெட்,சதீஷ் குமார், எம்.நஜாத், யாசின் ஜவாஹிர்(ஜனுாபர்)

வவுனியா மாவட்டம்

பரணசிங்பம் உதய ராசா, முத்து முஹம்மத், வீரகோன், தர்மபால செனவி ரத்ன,கணேஷன் லங்கேஸ்வரன்,அப்துல் பாரி,சிவன் சிவகுமார், ஜயதிலக, சேகு முனாஜித்


4 comments:

  1. KALAKKUREENGKA TALAIWA..!!!!!!!!!!

    ReplyDelete
  2. பார்ப்பதற்கு பாமரத்தனமாகத் தெரிகிறது!

    வேட்பாளர் பத்திரம் தாக்கல் செய்யச் செல்லும்போதே அல்லது கையளித்து வரும்போதே இப்படி இவர்களை மாலை போட்டு தோள்மீது சுமந்து வருகிறார்கள்..?!

    மனிதனை மனிதன் சுமக்கின்ற அடிமைத்தனம் இன்னமும் வன்னிப் பெரு நலப்பரப்பில் வாழ்வதாகவே தெரிகிறது.

    ஆமாம்... வெற்றிலையில் தமிழர், சிங்களவர், முஸ்லிம்கள் என்று பாகுபாடில்லாமல் அனைவரும் குந்திக் கொள்ளலாம். வீட்டுக்குள்தான் முஸ்லிம்கள் பிரவேசிப்பதை இவர்கள் வெறுக்கிறார்களாக்கும்?!

    எப்படியோ.. வாக்கெண்ணி முடிந்த பின்னர்தான் யார் யாரைச் சுமக்கப் போகின்றனர் என்பது தெரியவரும். பொறுத்திருந்து பார்க்கலாம்!

    -புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-

    ReplyDelete
  3. மகிந்தவுக்கு வால் பிடிக்கும் முனாபிக்குகள்!

    ReplyDelete

Powered by Blogger.