கட்டார் ATM கார்ட் மூலம் இலங்கையில் 3 கோடி ரூபா பணமோசடி
(Tn) கட்டாரிலுள்ள கொமர்ஷியல் வங்கியின் மூலம் எஸ். எச். சுல்தான் ஜெஸ்மின் அல்ஹானி என்பவருக்கு விநியோகிக்கப்பட்ட இலத்திரனியல் அட்டையொன்றிலுள்ள தரவுகளை பயன்படுத்தி மூன்று கோடியே 28 லட்சத்து 71,000 ரூபாவை மோசடி செய்த நபர் ஒருவரை பொலிஸார் தேடி வருகின்றனர்.
இலங்கையிலுள்ள ஹட்டன் நஷனல் வங்கியின் ஏ. ரி. எம். இயந்திரங்களினூடாக இவர் இந்த பண மோசடியை செய்து வந்துள்ளார்.
இலங்கையிலுள்ள ஏ. ரி. எம். இயந்திரங்கள் மூலம் பணம் பெறும் இலங்கையரின் புகைப்படத்தை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் வெளியிட்டுள்ளனர். படங்களில் காணப்படுபவர்கள் தொடரில் தகவல் தெரிந்திருப்பின் உடனடியாக 011-2422176 அல்லது 011- 2326670 அல்லது 011232041-145 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொண்டு அறியத் தருமாறும் பொலிஸ் தலைமையகம் கேட்டுக் கொண்டுள்ளது.
.jpg)
Post a Comment