Header Ads



8 வயது மகளின் 5 விரல்களை வெட்டி, அதன் காயங்களுக்கு உப்பிட்ட தந்தை

(Sfm) தமது 8 வயது புதல்வியின் வலது கையின் ஐந்து விரல்களையும் சவர அலகினால் வெட்டி அதன் காயங்களுக்கு உப்பினை இட்ட தந்தையொருவர் தொடர்பில் அநுராதபுரம் - ஹொரவப்பத்தானை பிரதேசத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

சந்தேகத்திற்குரிய தந்தை நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளதுடன், கெப்பற்றிகொல்லாவ நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஹொரவப்பத்தானை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தமது சில்லறை கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த இனிப்புகளில் இரண்டை குறித்த சிறுமி களவாக எடுத்து உண்டமை காரணமாக தந்தை, அவருக்கு இவ்வாறான தண்டனையை வழங்கியுள்ளார்.

8 வயது சிறுமிக்கு இவ்வாறான சித்திரவதை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், தந்தையின் அச்சுறுத்தல் காரணமாக அவர் யாரிடம் இதுபற்றி தெரிவிக்கவில்லை என்று காவல்துறை விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

எவ்வாறாயினும், சிறுமியின் தாயார் விவாகரத்து கோரி நேற்று ஹொரவப்பத்தானை காவல்நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

அந்த தருணத்திலேயே தமது புதல்விக்கு ஏற்பட்ட அசம்பாவிதத்தை அந்த பெண் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.

குறித்த சிறுமி ஹொரவப்பத்தானை – மொரகேவ வித்தியாலயத்தில் 3 ஆம் தரத்தில் கல்வி பயில்கின்றார்.

பாடசாலையில் ஆசிரியர்களால் குறித்த சிறுமியின் கையில் ஏற்பட்ட உபாதை தொடர்பாக வினவப்பட்ட போது, பொய்யான காரணங்களை கூறியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

5 comments:

  1. மிருக குணம் யாருக்கு சரி இருந்தால் அதை குனபடுத்த முடியாது.

    ReplyDelete
  2. நாய், பன்றி, பூனை, புலி போன்ற மிருகங்களுக்குக் கூட அதன் குட்டிகளின் மீது அளவற்ற பாசம் இருக்கிறதே..! காக்கைக்கும் அதன் குஞ்சு பொன் குஞ்சல்லவா?

    இந்தத் தந்தை 'தந்தை' என்ற சொல்லுக்கே தகுதியற்றவன்.

    -புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-

    ReplyDelete
  3. SILA VELAI ILLAI NICHCHIYAM MULAI KOLARU

    ReplyDelete
  4. ஊர் மக்கள் 4 - 5 பேர் சேர்ந்து இவனின் அந்தரங்க உறுப்பில் நான்கு கீறு கீறி உப்பு போட்டால் இதுபோன்ற ஈனச் செயலை விட்டும் முழு ஊரும் திருந்தும். இந்தப் படுபாவி மிருகமே அன்றி மனிதனல்ல.

    ReplyDelete
  5. தனக்கு பிறந்த சிறுமியா? அல்லது தனது மனைவிக்கு பிறந்த சிறுமியா? அல்லது அவ்விருவருக்கும் பிறந்த சிறுமியா ? என்ற சந்தேகங்களெல்லாம் வருகிறதே ! என்ன சமூகம்டா இது....................

    ReplyDelete

Powered by Blogger.