சவூதி அரேபியாவில் 'மத' கருத்துக் கணிப்பு நடத்தியவருக்கு 7 ஆண்டு சிறை, 600 சவுக்கடி
இஸ்லாமிய நாடுகளில் ஒன்றான சவுதி அரேபியாவில் இணையதளம் மூலம் மதம் தொடர்பான கருத்து கணிப்பில் ஈடுபட்டவருக்கு 7 ஆண்டு சிறைவாசத்துடன் 600 சவுக்கடிகள் தண்டனையாக வழங்கப்பட்டுள்ளது.
சவுதி அரேபியாவை சேர்ந்த ரய்ஃப் படாவி என்பவர், அந்நாட்டின் வாழ்க்கை முறையில் மதத்தின் ஆதிக்கம் எவ்வகையில் உள்ளது? என்று இணையதளத்தின் மூலம் கருத்துக் கணிப்பை நடத்தினார். இதில் பங்கேற்றவர்களில் பலர் தங்கள் மனதில் தோன்றியதை வெளிப்படையாக பதிவு செய்தனர்.
சில கருத்துகள் மதத்தின் ஆதிக்கம் பண்பொழுக்கத்தை பேணி பாதுகாப்பதாகவும், சிலர் தங்களின் சுதந்திரத்துக்கு கைவிலங்காக உள்ளதாகவும் கருத்து தெரிவித்திருந்தனர்.
ரய்ஃப் படாவி நடத்திய இந்த இணையதள கருத்துக் கணிப்பு சவுதியில் உள்ள மதவாதிகளிடையேயும், மத தலைவர்களிடையேயும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அவர் மததுவேஷ செயல்களில் ஈடுபட்டதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.
இதனையடுத்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் அவர் கைது செய்யப்பட்டார். ஜெட்டா நகரில் உள்ள செங்கடல் துறைமுகம் கோர்ட்டில் ரய்ஃப் படாவி மீது நடந்துவந்த வழக்கில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. அவருக்கு 7 ஆண்டு சிறைவாசமும் 600 சவுக்கடிகளும் தண்டனையாக வழங்கி நீதிபதி தீர்ப்பளித்தார்.

ஏனடா கண்ணா இந்தப் பொல்லா தனம்
ReplyDeleteபொது பல சேனா சிறி லங்கா அரசை சவூதி அரபிய முறையை பின்பற்றுமாறு கேட்குமா?
ReplyDeleteஇஸ்லாம் ஈருலக வாழ்வுக்கான ஒரு பூரண வாழ்க்கைத்திட்டம். அதனை ஒழுங்குற நெறிப்படுத்த அமையப்பெற்றுள்ளது ஷரீஆ சட்டம். ஆனால், இன்று சவுதியில் காணப்படுவதும், எஞ்சியிருப்பதும் மன்னராட்சிக்கு ஏதுவான ஷரீஆ சட்டம் மாத்திரமேயாகும். இஸ்லாமிய ஜனநாயகமல்லாத மன்னராட்சியை பாதுகாப்பதான சட்டங்களை சரீஆ என அழைப்பது பிழையானதாகும். முஹம்மத் (ஸல்) அந்நாட்டில் பிறந்தார் என்பதற்காக சவுதியின் இன்றைய போக்குகள் இஸ்லாம் ஆகிவிட முடியாது.இன்று கருத்துச் சுதந்திரத்தை மறுக்கும் ஒரு நிலைமை அங்கு காணப்படுகின்றதாயின் அது இஸ்லாம் தானா ? என ஒருமுறை முஸ்லிம்கள் சிந்தித்துப் பார்ப்பது அவசியமாகும்.
ReplyDeleteசகோதரர்களே ஏன் இப்படி கீழ்த்தரமாக யோசிக்கிரீர்கள். ஸவுதி அரேபியாவில் மன்னராட்ச்சி இருப்பதனால் அவன் என்ன செய்தாலும் அது தவறுதானா. உங்கள் தாய் ஒரு வேசை ஒருவன் சொன்னால் அது கருத்துச் சுதந்திரம் என்று விட்டுவிடுவீர்களh. இப்படி செய்யும் ஒருவருக்கு இஸ்லாமிய முறைப்படி என்ன செய்ய வேண்டும் என்று ஒரு காலத்திலும் யோசிக்கவேமாட்டீர்களா? நல்லது எங்கு நடந்தாலும் ஆதரியுங்கள்.
ReplyDeleteசவுதியில் நடப்பவையெல்லாம் நல்லவையென்று சகோ. இல்யாஸ் மதனி எவ்வாறு சான்று பகர முடியும்? இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம். மேற்கத்தியர்கள் கூட இஸ்லாமிய விழுமியங்களை விரும்பி ஏற்றுவரும் இன்றைய காலத்தில் எந்த ஒரு முஸ்லிமும் இஸ்லாமிய ஆதிக்கத்தை விமர்சிக்க முனையமாட்டான். ஆனால், சவுதியில் மத ஆதிக்கம் என்பது நபி (ஸல்) காட்டித்தந்த இஸ்லாமா? அல்லது நவீன மயப்படுத்தப்பட்ட ஒன்றா? என்பதை முதலில் விளங்கிக்கொள்ள வேண்டும்.
ReplyDeleteஇஸ்லாம் பூரண தனிமனித, சமூக, பிற சமூகங்களது சுதந்திரங்களையும், உரிமைகளையும் வழங்கியே வந்துள்ளது என்பதற்கான சான்றுகள் நிறைய உள்ளன. அவ்வாறு இருக்கும் பொழுது மத ஆதிக்கம் விமர்சிக்கப் படுகிறது என்றால் நிச்சயம் அது இஸ்லாமாக இருக்க முடியாது. இது ஒன்றும் கீழ்த்தரமான யோசனை கிடையாது. இதுதான் யதார்த்தம்.இஸ்லாம் யதார்த்தங்களை மீறி எதனையும் மனிதனுக்குப் போதிக்கவில்லை.
சகோ. இல்யாஸ் மதனி எனது தாய் ஒரு வேசை எனக் கூறியமைக்காக சவூதி மத ஆதிக்கத்தின் ஆதரவாளர்கள் போல் உடனே தண்டனை வழங்கிவிட முடியாது. அவரது கூற்றின் நியாயப்பாடு பற்றி ஆராய்ந்து, அது பொய்யென நிரூபிக்கப்படும் பட்சத்தில் மாத்திரமே இஸ்லாமிய முறைப்படி ஏதேனும் செய்ய முடியுமே தவிர அவர் கூறினார் என்பதற்காக அடர்ந்தேற முடியாது.
உலமாக்களின் துணைகொண்டு இஸ்லாம் மிக நீண்ட தூரத்துக்கு மலுங்கடிக்கப்பட்டு விட்டதையே சகோ.இல்யாஸ் மதனியின் கருத்து புடம் போட்டுக் காட்டுகிறது.