நீரிழிவு பாதிப்பு - வருடாந்தம் 600 கால்கள் வெட்டி அகற்றம்
நீரிழிவு நோயினால் பாதிக்கப்படலாம் என உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது.
இலங்கையில் கிராமப்புற மக்களில் 10 வீதமானவர்களும் நகர்ப்புற மக்களில் 15 வீதமானவர்களும் நீரிழிவால் பாதிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. பாடசாலை மாணவர்களில் 10 தொடக்கம் 15 வீதமானவர்கள் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நீரிழிவு நோயினால் மக்கள் பாதிக்கப்படுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சுகாதார அமைச்சுக்கு உலக சுகாதார ஸ்தாபனம் ஆலோசனை வழங்கியுள்ளது.
முறையான உணவு பழக்கம், உடற்பயிற்சி இன்மை அதிக வேலை பளுவால் ஏற்படும் மன அழுத்தம் போன்ற காரணங்களால் நீரிழிவு நோய் ஏற்படலாம் எனவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
நீரிழிவால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளர்களில் சுமார் 600 கால்கள் வருடாந்தம் வெட்டி அகற்றப்படுவதாகவும் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
.jpg)
Post a Comment